ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமானியாகிவிட்டார்

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமானியாகிவிட்டார், நமது நரிகுறவர் சாயல் அவரின் இனம்.

2012ல் விமான படிப்பினை தொடங்கிய அந்த பெண் இப்பொழுது விமானியாகிவிட்டார்

மிக தாழ்த்தபட்ட இனத்து பெண் பைலட்டாகி இருப்பது ஒரிசாவில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது, முதல்வர் பட்நாயக் உட்பட பலர் வாழ்த்து தெரிவிகின்றனர்

அந்த அனுபிரியா என்பவருக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம்

எனினும் ஒரு எச்சரிக்கையினையும் சொல்லி கொள்ளலாம்

மேடம், நீவீர் விமானத்தை அதன் ஓடுபாதையில் செலுத்தும் பொழுதோ இல்லை டாக்ஸி வே எனப்படும் நிறுத்தபாதை பக்கம் வரும்பொழுதோ ஒரு கோஷ்டி கையில் மாலையுடனும், விருதுடனும் நிற்கும்

அவர்கள் யாரென கேட்டால் திராவிட பெரியார் கோஷ்டி என்பார்கள், பெரியார் விருது அளிக்க வந்திருப்பதாக சொல்வார்கள்

அவர் யார் என மட்டும் கேட்டுவிடாதீர்கள் அதன் பின் அவ்வளவுதான்

பெரியார் இல்லாவிட்டால் நீ படித்திருக்க முடியுமா? விமானம் ஓட்ட முடியுமா? என அழிச்சாட்டியம் செய்து விமானத்தில் புகுந்து லேண்டிங் கியர் எல்லாம் உடைத்துவிடுவார்கள்

ஒரிசாவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என கேட்டாலும் விடமாட்டார்கள்

அதனால் சொல்கின்றோம், ரன்வே, டாக்ஸிவே அல்லது விமான நிலையத்தில் ஏர் க்ரூ செல்லும் வழியெல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்