விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, பார்த்தவுடனே சிரிப்பு வரவழைக்கும் குபீர் சிரிப்பு கோஷ்டி அது

விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம் என தொடங்கியிருக்கின்றது

புத்தருக்கான ஆடை மஞ்சள் அல்லது சிகப்பு, ஆனால் இவர்களுக்கோ காண சகிக்காத கருப்பு

சரி இவர்களுக்குத்தான் மதமே கிடையாதே? ஊர்வலம் செல்ல வேண்டுமானால் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், லெனின் போன்ற நாத்திகர்களை அல்லவா சுமக்க வேண்டும்? ஏன் புத்தர்

அதை கேட்டால் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவினாராம்

அம்பேத்கர் பெரும் மக்களோடு புத்தமதம் தழுவியது உண்மை, ஆனால் அம்பேத்கரை அம்போ என விட்டுவிட்டு அம்மக்கள் வேறு மதம் பக்கம் தலைதெறிக்க ஓடிவிட்டனர்

ஆம் அம்பேத்கரின் புத்த தழுவல் படுதோல்வியில் முடிந்தது, அது வெற்றி என்றால் இங்கே புத்தமதம் எழுச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆனால் புத்தமதம் என ஒருபயலும் இல்லை, இருந்தால் நம் அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா என்ன?

ஆக வழக்கொழிந்த மதத்தை வீம்புக்கு சுமக்கின்றார்கள்

இப்படி சுமக்கும் பயல் எவனாவது புத்தமதத்து மாறி மொட்டை அடித்து பிச்சை எடுத்து சாந்த சொரூபியாக மாற தயரா என்றால் இல்லை

அம்பேத்கர் சொன்னதையும் செய்ய கூடாது, புத்தர் சொன்னதையும் செய்ய கூடாது ஆனால் புத்தர் சிலையினை தூக்குவோம் என்பதெல்லாம் என்ன வகையோ

இந்த அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

இலங்கையில் சிங்கள பவுத்த பயங்கரவாதம் தமிழரை கொல்கின்றது என ஓலமிட்டவரும் இவர்களே

இப்பொழுது அய்யய்யோ புனிதமான புத்தன் என அவரை தூக்கி சுமப்பதும் இவர்களே

அட சிங்களன் என்ன?

அன்று பவுத்த பர்மிய பயங்கரவாதம் பர்மாவில் இருந்து தமிழரை அடித்து விரட்டுகின்றது என ஒப்பாரி வைத்தவர்களும் இவர்களே

வெளிநாட்டில் புத்தமதம் தமிழருக்கு எதிராக செய்யும் கொடுமைகளை கண்டிக்கும் இவர்கள்தான் இங்குதமிழனுக்கு புத்தமே ஆதரவு என பொங்குக்கின்றார்களாம்

ஏன் தமிழனை பர்மாவிலும், இலங்கையிலும் அடித்தான் அவன் தமிழ் பேசினான் என்றா?

இல்லை, அவன் இந்துவாக இருந்தான் என்பதற்காக, ஆம் அதுதான் அடியாழத்து உண்மை

பர்மா, ஈழ தமிழன் புத்தமதத்து காரனாக இருந்தால் அங்கு ஒருபயலும் தொட்டிருக்கமாட்டான்

சைவ சமயத்தை காக்கவே ஈழத்திலும் பர்மாவிலும் அடிவாங்கி செத்தான் தமிழன்

ஆக இந்த அய்யய்யோ கோஷ்டிகள் சொல்லவரும் உண்மை என்ன தெரியுமா?

ஏ தமிழனே இந்து மதத்தை தூக்கி எறி, நாமெல்லாம் புத்தமதத்தில் கலந்து அகண்ட தமிழ்நாட்டை இலங்கை பர்மா வரை அமைப்போம்

இதுதான் உண்மை, இவர்களின் நோக்கம் சிங்களனுக்கும் பர்மா புத்த மொட்டைகளுக்கும் உதவுவது

சிங்கள கைகூலியாகிவிட்ட இந்த திராவிட சிங்கங்களிடம் தமிழர்கள் மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது

ஒரு காலத்தில் தமிழனை அடிக்கும் பொழுது இந்துக்களை அடிக்கின்றார்கள் என சொல்லாமல் தமிழனை அடிக்கின்றார்கள் என சொல்லி, இன்று அதே சிங்களனுக்கு ஆதரவாக புத்த கொடி பிடிக்கின்றார்கள் அல்லவா?

இதுதான், இதுவேதான் திருட்டு திராவிடம்

இதன் வேர் இந்தியாவில் அல்ல, ஐரோப்பா அமெரிக்கா பாகிஸ்தானில்தான் உண்டு , இலங்கையின் கரங்களும் அதில் ஊடுருவியிருப்பது இப்பொழுது கண் கூடாக உங்களுக்கே தெரியலாம்