பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம்

அகில இந்திய அளவில் தேசிய தரமதிப்பீட்டு குழு (NACC) பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம் கொடுத்ததாக தெரிவிகின்றது

கலை அறிவியல் கல்லூரியில் அதுதான் இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றதாம்

இந்த மதிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்கும், அதன் பின் மறுமதிப்பீடு செய்வார்களாம்

நமக்கு அறிவு கொடுத்த கோவில் அது, அனுதினமும் நாம் வணங்கும் ஆலயம் அது என்றவகையில் நமக்கு பெருமையே

அங்கு கணிப்பொறி பிரிவில் சேர்ந்தாலும் அதை தவிர வேறு எல்லாவற்றையும் உருப்படியாக படித்தது அங்கேதான்

கணிப்பொறி அறிவியலை தவிர வேறு எல்லாவற்றையும் நன்றாக அங்குதான் கற்றோம், அது போதித்த பாடம் கொஞ்சமல்ல, ஆயுளுக்கும் மறக்காது

நிச்சயம் மிக சிறந்த கல்லூரி, அன்றே மிக நுட்பமான வகையில் மாபெரும் சேவைக்கான அஸ்திவாரத்தில் அது அமைக்கபட்டது

தமிழகத்தில் இயேசுசபை குருக்களின் அர்பணிப்புக்கும் சேவைக்கும் மகா சான்றான கல்லூரி அது

100 வருடமாக தங்களின் நிலையினை உச்சத்தில் வைத்து கொள்வது சாதாரணம் அல்ல‌

எவ்வளவு பெரும் பிம்பங்களை உருவாக்கிய கல்லூரி அது?

வைகோ அக்கல்லூரியின் மாணவர் என்பதை தவிர ஒரு கரும்புள்ளியினையும் யாரும் காட்டமுடியாது, அவரும் கல்லூரி காலத்தில் ஒழுங்காக இருந்திருக்கின்றார், வளாகத்தினை தாண்டித்தான் பேய் பிடித்திருக்கின்றது

இன்னும் சில ஆண்டுகளில் அது நூற்றாண்டு விழாவினை காணும் நேரத்தில் அதற்கான பெருமை அதற்கு கிடைத்திருக்கின்றது

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கபடும் பாளையங்கோட்டையில் அக்கல்லூரிக்கு மிகபெரும் கவுரவம் கிடைத்திருப்பதற்கு அக்கல்லூரியின் குருக்களையும் பேராசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்

மிக பொருத்தமான இடத்தை மிக மிக தகுதியுள்ள கல்லூரிக்கு கொடுத்திருக்கின்றார்கள், அதன் நிர்வாகமும் பாடதிட்டமும் நொடியும் தாமதிக்கா புதுப்பித்தலும் அப்படி

இதுபற்றி முன்னாள் மாணவியும் இந்நாள் சாரா டக்கர் பேராசிரியையுமான Adline Rajasenah Merryton என்பவரிடம் கேட்டால் அவரின் பதில் இப்படி இருக்கின்றது

“இதுதான் நாட்டின் நம்பர் 1 கல்லூரி என்றால் மற்ற கல்லூரியின் நிலமையினை யோசித்து பாராய் மகனே”

சாரா டக்கர் கல்லூரி பட்டியலிலே இல்லை என்பதை தவிர இந்த வார்த்தைக்கு வேறு காரணம் இருக்க முடியாது

(பாஜகவின் பாசிச ஆட்சியிலும் இந்துவெறி தறிகெட்டு ஓடும் ஆட்சியிலும் ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்கு முதலிடம் என்றால் அதெல்லாம் இந்த பாசிச இந்து பயங்கரவாத ஆட்சியின் நாடகமன்றி வேறேன்ன என் திராவிட இனமே….)