உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை
நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் கணவனை சொத்துக்காக மனைவியே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்ற கொடூர சம்பவம் நடந்திருக்கின்றது
சொத்துக்காக அதுவும் கணவனை அதுவும் பெட்ரோல் உச்சத்தில் விற்கும் இந்த விலையிலும் வாங்கி கொளுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சி
சொத்துக்காக உறவுகளை கொளுத்தி கொல்வது பட்டினத்தார் காலத்திலே இருந்திருகின்றது
“தன்வினை தன்னை சுடும், ஓட்டப்பம் ஓட்டை சுடும்..” என தன்னை கொல்ல வைத்த தீயில் இருந்து அவர் அப்படித்தான் ஓடி வந்திருக்கின்றார்
இந்த மனிதர் பாவம் வெளிநாட்டில் கஷ்டபட்டு சம்பாதித்துவிட்டு வந்தபின் அவரின் சொத்துக்காக நடந்த கொடுமை இது
நாமும் கவனிக்கின்றோம்
இவ்வுலகில் கஷ்டபட்டு சம்பாதிப்பவர்களை விட வேலையே செய்யாமல் சும்மா இருப்பவர்களுக்குத்தான் சொத்தின் மேல் ஆசையும் வெறியும் வருகின்றது
அது வீடு,நிலம், கம்பெனி மற்றும் கட்சி அரசியல் என எதுவானாலும் சரி.
இதோ கஷ்டபட்டு உழைத்தவன் சொத்து சேர்த்துவிட்டு செத்துவிட்டான், கொலைகாரி மனைவி சிறைக்கு செல்வாள்
சம்பந்தமே இல்லா மருமகனோ, மருமகளோ அதை அனுபவிப்பர்
ஆக உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை, உலக முரண் இது