அறை நண்பனின் அருமை மகனுக்கு இன்று பிறந்த நாள்

அறை நண்பனின் அருமை மகனுக்கு இன்று பிறந்த நாள்

அவனை வாழ்த்துகின்றோம், அறை நண்பன் நிச்சயம் மஹா நல்லவன் பெரும் பக்திமான்

ஆனால் அப்பாவி

அப்பாவிகள் மட்டுமே திமுகவில் இருக்கமுடியும் என்பதால் அவனும் அதில் தொடர்ந்து இருகின்றான், இப்பொழுதும் முக ஸ்டாலினின் சொதப்பல்களுக்கு முட்டு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமே அவனிடம் உண்டே தவிர தலமை சரியில்லையே என்ற கவலை துளியுமில்லை

இம்மாதிரி அப்பாவிகளே திமுகவின் பலம்

அது இருக்கட்டும், பிறந்த நாள் கொண்டாடும் தளிருக்கு அறை நண்பன் அனுதினமும் வணங்கும் சபரிமலை அய்யப்பன் எல்லா நலனையும் வளங்களையும் அருளட்டும்

பொன்னம்பல மேட்டு ஜோதியாக அவன் தனித்து தெரியட்டும்

திமுக எனும் மாயை அவன் தகப்பனோடு முடியட்டும், இந்த தளிர் தேசியத்தில் துளிர்கட்டும்

இந்த பிரகலாதன் போல, தகப்பனுக்கு போதித்த குமார சாமி போல அவன் மிளிரட்டும்

சகல தெய்வங்களும் அவனை காக்கட்டும்..