அடுத்தமுறை அமைச்சர் சுதாரிப்பார் என நம்புவோம்
சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தார் நிர்மலா சீத்தாராமன்
எவ்வளவோ விஷயங்களை விளக்கினார், கார் விலை சரிய ஒலா, உபர் போன்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம் அதாவது பொது போக்குவரத்து இன்னபிற போக்குவரத்து வசதிகள் இருப்பதால் கார் வாங்குவதில் மக்களுக்கு ஆர்வமில்லை என சொன்னார்
இதில் நிர்மலா சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும், காருக்கான எதிர்காலம் என்னவென தெரியாமல் உலகம் தள்ளாடுகின்றது
எதிர்காலத்தில் பேட்டரி கார், ஆளில்லா கார் என என்னவெல்லாமோ வரபோகும் காலத்தில் இந்த கார்களை என்ன செய்வது என்பதுதான் உலக தியரி
இந்தியாவில் உலோக வர்த்தகம் , பெட்ரோல் விலை இன்னும் ஏக காரணங்கள் இருக்கும்பொழுது ஓலா உபர் மேல் பழியினை திருப்புவது சரியல்ல
ஓலா உபரால் பாதிக்கபட்டது வாடகை கார் ஓட்டுநர்களும் இன்னபிற தொழிலாளிகளும் அவர்கள்தான் இப்படி சொல்லவேண்டும்
நிதி அமைச்சர் அப்படி சொல்லியிருப்பது சரியல்ல, தவிர்த்திருக்கலாம்
எனினும் ஒவ்வொரு சிறுகாரியங்களிலும் நாம் கவனமாயிருப்போம் என்பதை சொல்ல இதுவும் ஒரு காரணம் என அமைச்சர் சொல்லியிருக்கலாம்
அடுத்தமுறை அமைச்சர் சுதாரிப்பார் என நம்புவோம்
இந்த வார்த்தையில் அமைச்சருக்கு முட்டு கொடுக்க முடியாது என்பதை சங்கம் வருத்தத்துடன் பதிவு செய்துகொள்கின்றது