பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை
பாரதியின் கடைசி காலங்களை அருகிருந்து பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள்
அனுதினமும் கோவிலுக்கு சென்று அப்பனே கணேசா உன்னை வணங்குகின்றேன் என யானைக்கு பழம் கொடுப்பது பாரதி வழக்கம்
அன்றும் அப்படித்தான் பழம் கொடுத்திருகின்றார், யானை தள்ளிவிட்டிருக்கின்றது
அதற்கு மதம் பிடித்த காலமுமல்ல, அது அவரை வேண்டுமென்றே தாக்கவுமில்லை
மாறாக எல்லா நாளும் விளையாடுவது போல விளையாடியிருக்கின்றது, ஆனால் படக்கூடா அடிபட்டு பாரதி விழுந்துவிட்டார்
பாரதி விழுந்து அவரை எல்லோரும் சூழ்ந்திருக்கும் பொழுது அந்த யானை மிகுந்த வருத்தத்துடன் அவர் அருகே நின்றதாக குறிப்புகள் சொல்கின்றன
அதற்கு அவன் மகா கவிஞன் என தெரியுமா? தேசாபிமானி என தெரியுமா?
பழம் கொடுத்து கொஞ்சுபவன் என்ற ஒன்றை தவிர அதற்கு என்ன தெரியும்?
யானை தாக்கியதில் இருந்தே அவருக்கு சுகக்கேடு தொடங்கி கொஞ்சநாளில் மரித்தும் போனார் அந்த அறிவு சுடர்
முதலில் அவனை தாக்கியது அவனின் பார்ப்பன சமூகம், அடுத்து தாக்கியது ஆங்கிலேயன், அடுத்தடுத்து தாக்கியது அவனின் அறிவை புரிந்துகொள்ளாத சமூகம்
கடைசியாக அதுவும் விளையாட்டாக தாக்கியதுதான் யானை, ஏற்கனவே மனதால் செத்திருந்த பாரதி அதன்பின் உடலால் செத்துவிட்டான்
பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை