நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மறுபடியும் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள் , சுற்றட்டும்
நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மறுபடியும் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள் , சுற்றட்டும்
நியூட்டனுக்கு முன்பு புவிஈர்ப்பு விசை இல்லாமலா இருந்தது, அது எக்காலமும் உண்டு.நியூட்டன் புதிதாக கண்டுபிடிக்கவில்லை
மாறாக அந்த விசைக்கான கணக்கீடுகளை உருவாக்கினார்
அவர் கொள்கைபடி எதுவுமே மாறாது, எல்லா விசையும் நிலையானது
இந்த ஐன்ஸ்டீன் இருக்கின்றாரே அவர் கொள்கைபடி எல்லாமே மாறும், ஒளியின் வேகம் ஒன்றே நிலையானது
நியூட்டனின் கொள்கைகளில் சில தவறு இருந்தது, ஐன்ஸ்டீன் அதை மாற்றி உலகபுகழ் பெற்றார்
அதாவது எல்லாமும் சில இடங்களில் மாறும் ஈர்ப்புவிசை உட்பட மாறும் என்பது ஐன்ஸ்டீன் கொள்கை
பின்னாளைய விஞ்ஞானமும் சந்திரனின் நெருக்கம் மற்றும் சுழற்சியினை பொறுத்து பூமியின் ஈரப்பு விசை பாதிக்கும் என சொன்னது
கடல்மட்டம் அமாவாசை மற்றும் பவுர்ணமிகளில் கூடி குறைவது இதனால்தான் என அது சொல்லிவிடது
இந்த தத்துவத்தை அன்றே சொன்னது அறிவான இந்துமதம்
புவிஈர்ப்பு விசைக்கும் செரிமானத்துகும் தொடர்பு உண்டு, அதனால் சந்திரன் பூமிக்கு அருகே வரும் காலங்களில் கிரகண காலங்களில் மானிட உடலுக்கு செரிமான சிக்கல் வரும்
குறிப்பிட்ட நாட்களில் விரதமும் லேசான உணவும் எடுத்துகொள்ள இந்துமதம் போதித்ததும் இதனாலே,
கிரகண நேரத்தில் கர்ப்பவதிகளை கவனமாக இருக்க சொன்னதன் தத்துவமும் இதுவே
சந்திரனால் மாறுபடும் புவிஈர்ப்பு விசை சில பாதகங்களை ஏற்படுத்தும்
ஆக புவிஈர்ப்பு விசை மாறும் என விஞ்ஞானம் சொல்வதை அன்றே சொன்னது இந்துமதம்.
அதைமட்டுமா சொல்லிற்று?
விண்வெளியில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் இடையே ஒரு ஈர்ப்பு விசை உண்டு எதிர்விசையும் உண்டு, அதில்தான் இந்த பிரபஞ்சம் ஒட்டவும் இல்லாமல் விலகலும் இல்லாமல் தொடர்ந்து சீராய் இயங்குகின்றது
உதாரணத்துக்கு பூமி சூரியனை நெருங்குவதுமில்லை விலகுவதுமில்லை ஒரு சக்தி அதை சரியாக இயக்குகின்றது
இதே தத்துவத்தின்படிதான் அணுவும் இயங்குகின்றது புரோட்டானை சுற்றி எலெக்ட்ரான் ஓடும், எலெக்ட்ரான் புரோட்டானுடன் நெருங்காமலும் விலககாமலும் காக்கும் வேலையினை நியூட்ரான் செய்யும்
ஐன்ஸ்டீன் தன் கடைசி காலங்களில் அணுவுக்கும் அண்டத்துக்குமுள்ள பொதுவான விதியினை வகுக்க விரும்பி ஆனால் முடியாமல் மறைந்தார்.
ஐன்ஸ்டீனின் இந்த கடைசி கால ஆய்வினை இந்துமதத்தின் கீதையில் பகவான் கண்ணன் விளக்குகின்றார்
பல விஷயங்களுக்காக பாரததையும் இந்துமத தத்துவங்களையும் படித்த ஐன்ஸ்டீன் அதையும் படித்திருக்கலாம்
பகவான் கண்ணன் இப்படி சொல்கின்றான், இந்த பிரபஞ்சம் சத்வ,ரஜோ.தமோ என்ற முக்குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது
ரஜோ என்பது விலக்கும் சக்தி. தமோ என்பது கவரும் சக்தி. சத்வ என்பது இரண்டையும் சமன்படுத்தும் சக்தி.
இதை நன்றாக மனதில் பதிய வையுங்கள், இப்பொழுது அணுவினையும் அண்டத்தையும் நோக்குங்கள்
புரோட்டான் என்பது கவரும் சக்தி, பூமிக்கு சூரியன் போல அல்லது நிலவுக்கு பூமி போல
எலெக்ட்ரான் என்பது எதிர்சக்தி , சூரியனுக்கு பூமி போல அல்லது பூமிக்கு சந்திரன் போல
இதில் சூரியன் பூமியினை ஈர்க்கும் பூமி எதிர்விசை காட்டும், பூமி நிலாவினை ஈர்க்க்கும் நிலா எதிர்விசை காட்டும்
அதாவது ஒன்று ஈர்க்கின்றது ஒன்று அற்றுபோக நினைக்கின்றது, இதில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் அதாவது ஒன்று இரண்டும் இணைய வேண்டும் அல்லது விலக வேண்டும்
ஆனால் இரண்டையும் அதன் அதன் எல்லையில் பிடித்துவைக்கும் சக்திதான் சத்வ குணம்
அணுவில் அதை நியூட்ரான் செய்கின்றது, அண்டவெளியில் யார் செய்கின்றார்கள் என தெரியாமல் ஐன்ஸ்டீனே குழம்பி செத்தார்
ஈர்ப்புவிசை என்பது தமோ, விலக்குவிசை என்பது ரஜோ , சமன்விசை என்பது சத்வ என பகவான் இதைத்தான் கீதையாக சொன்னார்
மனிதனுக்கும் இந்த மூன்று விசையும் தேவை, இதைத்தான் அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்றனர் இந்துக்கள்
மனிதனை உழைக்க சொல்வது ஈர்ப்பு விசையான தமோ குணம், அதே நேரம் ஓய்வினை சொல்வது விலக்கு விசை யான ரஜோ குணம், இரண்டையும் சமபடுத்தி செல்வது சத்ம குணம்
இந்த மூன்றும் சமநிலையில் இல்லாத மனிதன் யாராக இருந்தாலும் வீழ்ந்து போகின்றான்
அது உழைப்போ, கட்சியோ, குடும்பமோ, பாசமோ, காதலோ , நட்போ, பக்தியோ எதுவானாலும் ஈர்ப்பு இருக்கும் அளவு விலக்கமும் இருக்க வேண்டும்
அதே நேரம் விலகியும் சென்றுவிட கூடாது, உள்ளேயும் விழுந்து விட கூடாது
ரஜோ குணமும், தமோ குணமும் சத்வத்தால் கட்டுபடுத்தபட வேண்டும், அதுவே வாழ்வு
விஞ்ஞானம் சொல்லும் உண்மைகளையும், உளவியல் சொல்லும் உண்மைகளையும் என்றோ சொல்லிவிட்ட அற்புதமான மதமே இந்துமதம்
தோண்ட தோண்ட அற்புதமும் அதிசயமுமாக அது கொடுத்து கொண்டே இருக்கும், விஞ்ஞானம், மருத்துவம் முதல் எல்லாவகையான நவீன சோதனை முடிவுகளுக்கும் அது அன்றே பதில் எழுதி வைத்திருக்கும்
“எங்கு சுற்றினாலும் ரங்கனை சேர்..” என இதனைத்தான் சொல்வார்களோ என்னமோ?
நிச்சயம் அது மாபெரும் கடல், அதை சிப்பியால் அள்ளமுடியாது
அவ்வப்போது சில துளிகளை மட்டும் இந்த சிறிய சிப்பியால் அள்ளி பார்த்து கொள்கின்றேன்
மற்றபடி அது பெரும் அலைகளுடன் ஆர்பரித்து பரந்து விரிந்து கிடக்கின்றது, அதனுள் இன்னும் எத்தனை எத்தனை லட்சம் கோடி ரகசியங்கள் புதைந்திருக்கின்றதோ யாருக்கு தெரியும்?
அந்த பகவான் ஒருவனை தவிர..

