மோடி ஏன் பத்திரிகை முன்னால் வராமல்

அமைச்சர் பியூஸ் கோயலின் ஐன்ஸ்டீன் காமெடி வைரலாகி உலக கவனம் பெற்றுவிட்டது

அதிமுக அமைச்சர்களும் , திமுக தலமையும் தமிழில் தமிழ்நாட்டில் காமெடி செய்வதால் உலகபுகழ் அடையவில்லை

ஆனால் டெல்லியில் உளறியதால் அமைச்சர் கோயல் உலகபுகழ் பெற்றுவிட்ட்டார்

புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்தது ஐன்ஸ்டின் என அவர் சொன்னது உலக கலாய்ப்பாகிவிட்டது

அப்படியா அவரா கண்டறிந்தார்? வேறு யாரெல்லாம் என்னவெல்லாம் கண்டறிந்தார் சொல்லுங்கள் என அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

பாஜக அமைச்சர்களுக்கு நாக்கில் சனி, நல்ல பரிகாரம் செய்துவிட்டு அவர்கள் வாய்திறப்பது நல்லது

இல்லை ஊமைகளுக்கான செய்தி போல சைகையில் பேசிகொள்ளலாம்

முன்பு மொரார்ஜி தேசாய் என்றொருவர் இருந்தார், ஒருமாதிரியான முரட்டு ஆசாமி

சம்பந்தமில்லா கேள்விகளை கேட்டால் மனிதர் டென்சனாகிவிடுவார் , ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் முதுமையிலும் நீங்கள் உற்சாகமாக இருப்பது எப்படி என கேட்டார்கள்

கடுப்பான மனிதர் “அதுவா நான் காலை எழுந்தவுடன் சிறுநீர் குடிப்பேன், நீனும் முயற்சி செய்..” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

காலை எழுந்தவுடன் மொரார்ஜி சிறுநீர் குடிப்பார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது

அது பெரும் செய்தியாகி , உலகெல்லாம் பரவி, சிறுநீர் ஆய்வெல்லாம் தொடங்கி ஏன் மொரார்ஜிக்கே போன் போட்டு “அய்யா காலை எப்பொழுது குடிப்பீர்? சாப்பாட்டு முன்பா பின்பா?

எவ்வளவு குடிப்பீர்? உம் சிறுநீர் மட்டுமா இல்லையா?

மதியம் என்ன குடிப்பீர்? இரவு என்ன குடிப்பீர்? எவ்வளவு அளவு?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள்

அவர் பதிலே சொல்லவில்லை

பின்பு எதிர்கட்சிகள் எல்லாம் சிறுநீர் குடிப்பவருக்கு ஏது மூளை என்றளவு கலாய்த்தான‌

இன்றளவும் மொரார்ஜி சிறுநீர் குடிப்பார் என்ற பிம்பம் அவர்மேல் விழுந்துவிட்டது, அதை மாற்றமுடியாது

ஆனால் அவர் குடித்ததே இல்லை, கோபத்தில் சொன்ன வார்த்தை அவரை அப்படி ஆக்கிவிட்டது

மத்தியில் இருப்பவர்கள் அவ்வளவு கவனமாக பேசவேண்டும் அல்லது நம் முக அழகிரி பேசாமலே அமைச்சராக இருந்தது போல் இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் சிக்கல்தான், மத்திய அமைச்சர்கள் பெறும் கவனமும் அதை உலக மீடியாக்கள் சொல்லும் வீச்சும் அதிகம்

மோடி ஏன் பத்திரிகை முன்னால் வராமல் தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளின் உரையினை தன்னந்தனியே வாசித்துவிட்டு செல்கின்றார் என்றால் இதுதான் காரணம்..