வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள்

வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள், அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம்

இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌

அமெரிக்கா என்றால் ரஷ்யா சீனா என சீறும், பாகிஸ்தானுக்கு ஒரே ராகம் காஷ்மீர், ஈரானுக்கு இஸ்ரேல், ஜப்பானுக்கு ரஷ்யா என காட்சிகள் உலகெல்லாம் அதிகம்

தமிழ்நாட்டில் திமுகவுக்கு திராவிடம் மாநிலசுயாட்சி என சில பிராண்டுகள், அதிமுகவுக்கு ஊழல் கருணாநிதி, கன்னடத்துக்கு காவேரி, இந்தியாவில் பாஜகவுக்கு ராமர் கோவில், பாகிஸ்தான் என ஏகபட்ட உதாரணம் உண்டு

இஸ்ரேலுக்கு சந்தேகமின்றி ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன் இதைவிட்டால் அவர்கள் அரசியல் இல்லை

இரு தேர்தலிலும் பெரும்பான்மை கிடைக்கா நேதன்யாகு இம்முறை பெரும் சர்ச்சையினை கிளப்புகின்றார்

தான் வெற்றிபெற்றால் பாலஸ்தீனத்தின் மேற்குகரையின் ஒரு பகுதியினை இஸ்ரேலோடு இணைப்பேன் என்கின்றார்

பாலஸ்தீனம் இன்னும் கதறுகின்றது, விடுதலை இல்லை அதை கொடுப்பாரும் இல்லை

ஒரே ஆறுதல் அராபத் கொடுத்த அல்லது பெற்றுகொடுத்த எல்லை

அந்த எல்லையினை தாண்டி சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க போவதாக மிரட்டுகின்றார் நேதன்யாகு

அரபு நாடுகள் இதை கண்டிக்கின்றன, இஸ்ரேல் வழக்கம் போல் கைதட்டுகின்றது, ஐநா கூட முறைக்கின்றது

நேதன்யாகு இதை எல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை

அந்த மேற்குகரை பகுதிகள் குறித்து சர்ச்சை இருந்தது நம்முடைய காஷ்மீரின் எல்லை பகுதி போன்ற சர்ச்சை அது

அதை மீட்பேன் என நேதன்யாகு முழங்கினால் என்ன அர்த்தம்?

ஆக மோடியிடம் இருந்து நேதன்யாகு பாடம் படித்திருக்கின்றார் என்ற கோணத்தில் பார்க்கலாம் அல்லவா?