இதனால் பாதுகாப்பும் அதிகம்
சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் சந்திக்க போவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்
அதற்கான கடும் பாதுகாப்பில் இரு நாட்டு ரகசிய பாதுகாப்பு குழுக்களும் இறங்கிவிட்டன
சீன அதிபர் வருவதால் அவரின் பாதுகாப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள், சர்வதேச நடைமுறைபடி அவர்கள் குழுதான் வந்து உறுதி செய்யும் சம்பந்தபட்ட இடத்தையும் சுற்றி 5 கிமீ அவர்கள் கட்டுபாட்டில் எடுக்கும்
கட்டுபாடு என்றால் துப்பாக்கியோடு 1000 பேர் நிற்க, வாகனங்களை தடுத்து , உள்ளாடை வரை சோதனை செய்து அந்த பகுதியினையே களபேரமாக்குவது அல்ல
மாறாக கூலிங்க் கிளாஸ் சகிதம் ரகசியமாக பார்த்து கண்காணித்து பாதுகாப்பினை வலுபடுத்துவது
கண்காணிப்பென்றால் மகாபலிபுரத்தில் சில ஜோடிகள் என்ன செய்யுமோ அதை எல்லாம் ஆர்வமாக பார்ப்பது அல்ல, மாறாக ஆபத்துக்கு வாய்ப்பு உண்டா, எவனும் அல்லது ஏதும் குழுக்கள் ரகசிய திட்டமிடுகின்றதா? என பல வகைகளில் கண்காணிப்பார்கள்
திபெத் , உய்க்குர், ஜப்பான், தைவான் , வியட்நாம் என ஏகபட்ட இடங்களில் வம்பு இழுத்து வைத்திருக்கும் நாடு சைனா, அத்துடன் அமெரிக்கா இந்தியாவோடு நல்லுறவும் இல்லை எதிகள் அதிகம்
இதனால் பாதுகாப்பும் அதிகம்
மிக மிக ரகசியமான ஆனால் கடும் பாதுகாப்பில் மகாபலிபுரம் வந்துவிட்டது என்கின்றார்கள்
ஆனால் பார்க்க அப்படி தெரியாது, சீனர்கள் நடமாடியது போலவே தெரியாது ஆனால் எல்லாம் மகா பலமாக கண்காணிப்பு பாதுகாப்பு என நடந்துகொண்டிருக்கின்றது
மோடி வரும்பொழுது கருப்புகொடி காட்டுவார்களா என தெரியாது, காஷ்மீர் விவகாரம் முதல் பல விஷயங்களில் கொதிக்கும் எதிர்கட்சி இம்முறை கருப்பு கொடி காட்டுமா என்பது தெரியவில்லை
ஆனால் மகா முக்கியமான இந்த சந்திப்பில் ஏதும் வம்பு செய்தால் விளைவுகள் சாதரணமாய் இரா
சரி திமுகவினை விடுங்கள், இறுதி யுத்தத்தில் ராஜபக்சேவுக்கு ஆயுதங்களை அள்ளிகொடுத்த நாடு சீனா, அந்த தமிழின விரோதி சீனாவின் தலைவர் தமிழகம் வர நாம் தமிழர் எப்படி அனுமதிக்கும்
இதுபற்றி தும்பிகளிடம் கேட்டால், லூசாண்ணே நீங்க, இங்க காய்கறி விஷம், தண்ணி விஷம் எல்லாமே விஷம்
தமிழனுக்கு பனையோட அருமை தெரியல, பனை அழிந்தால் ஒரு இனமே அழியும்
பனையினை மீட்டெடுத்தால் தமிழ்நாடே மீண்டெழும் தமிழினமே மீண்டெழும், எங்களுக்கு லட்சம் கனவு இருக்குண்ணே உங்கள மாதிரி இல்ல”
டேய் அந்த சைனா ராஜபக்சேவுக்கு என்னவெல்லாம் உதவிச்சி, அந்த இனபடுகொலை, போர்குற்றம் என சொன்னால்
அண்ணே உங்ககிட்ட பேச நேரமில்லை , இன்னைக்குள்ள 1000 பனைவிதை விதைக்கணும், எங்க லட்சியத்துல குறுக்க நிக்காதீங்க என சொல்லிவிட்டு ஓடிவிட்டது தும்பி
ஆக இன விடுதலை என கிளம்பிய மாபெரும் இயக்கம், அதிகாரத்தை கைபற்றி ஈழத்தை விடுவிக்க வேண்டிய இயக்கம் பனை வளர்க்கின்றது
சிங்களனை பிரபாகரன் வழியில் அடித்து விரட்ட வேண்டிய வீரபடை பட்டினத்தாரின் கௌதாம்பினி கோலத்தில் பனை ஏற போகின்றது, பரிதாபம்