விஞ்ஞானி நம்பிநாராயணின் புத்தகம் பரபரப்பினை கிளப்பலாம்

நாம் முதலிலே சொல்லிவிடும் விஷயம் சில நாட்கள் அல்லது மாதங்கள் கழித்துத்தான் இங்கே விவாதிக்கபடும் அல்லது பரபரபான செய்தியாகும்

அப்படி விஞ்ஞானி நம்பிநாராயணின் புத்தகம் பரபரப்பினை கிளப்பலாம் என சொல்லியிருந்தோம் புத்தகம் வந்து பிரச்சினையினை கிளப்புகின்றது

நம்பி நாராயணன் 1967க்கு அடுத்த காலங்களை சொல்கின்றார், ஸ்ரிஹரிகோட்டாவுக்கு பதிலாக தமிழகத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விக்ரம் சாராபாய் வந்ததாகவும் ஆனால் திமுகவின் போதை அமைச்சரின் அழிச்சாட்டியத்தில் அவர் மனம் வெறுத்து ஆந்திரா சென்றதாகவும் தகவல் வருகின்றது

கூடவே மகேந்திரகிரி மலைக்கு ராமசந்திரன் அனுமதி கொடுத்த நன்றியும் வருகின்றது

ஆக அண்ணா மதுகடை திறக்கா பொழுதே பெரும் குடிகார அமைச்சர் இருந்திருக்கின்றார், அவர் ஊழலும் செய்திருக்கின்றார், அண்ணா இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றார்

நம்பிநாராயணன் புத்தகம் வந்து அணலை மூட்டினாலும் திமுகவினருக்கு இதற்கான பதில் எளிது

“ஆம், நம்பி நாராயணன் ஒரு பார்ப்பான், சமூகநீதியினை காத்து பார்ப்பானிய அட்டகாசத்தை ஒடுக்கிய போராளி இயக்கம் மேல் அவருக்கு வன்மம் அதிகம், இது ஆரிய பார்ப்பானிய சதி..”