இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது

இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது, இதற்கு முன்பு ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்தாலும் ரஷ்ய கலத்தில் அவர்கள் அழைத்து சென்றார்கள்

இப்பொழுது 30வீரர்களை தேர்ந்தெடுத்து இந்தியா பயிற்சி அளிக்கின்றது, 2022ல் அவர்களில் சிலர் பறப்பார்கள்

இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திற்று, அவர்களும் 2022ல் விண்வெளிக்கு பறப்பார்களாம் , சீனா உதவுமாம்

பாகிஸ்தான் சீனாவில் இஸ்லாமியர் கொடுமைபடுத்தபடுவது பற்றி ஏன் வாய்திறக்கவில்லை என இந்தியா சில சக்திகளின் ஊடாக கொளுத்தி போட்டது, ஆனானபட்ட இம்ரான்கானே சீன இஸ்லாமியர் நிலைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிரிக்காமல் சொன்னார்

அந்த அளவு இஸ்லாமிய சகோதரத்துவத்தை மறந்து சீனாவின் வாலில் சுருண்டு கிடக்கின்றது ஜின்னாவின் தேசம்

சரி அவர்கள் விண்வெளிக்கு யாரை அனுப்புவார்கள்?

இந்த ஜெய்ஸ் இ மொகமட் மசூத் அசார், லஷ்கர் தலைவன் சையீத், தாவுத் இப்ராஹிம் போன்றவர்களை ஒருவழி பயணமாக அனுப்புவதாக இருந்தால் இந்தியா நிச்சயம் தொழில்நுட்ப உதவி செய்யும்