பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம்

இன்று புரட்டாசி விரதம் தொடங்குகின்றது, பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம்

சனிக்கிழமை விரதம் மட்டுமல்ல, அமுக்தாபரண விரதம்,ஜேஷ்டா விரதம்,தூர்வாஷ்டமி விரதம்
மஹாலட்சுமி விரதம், கபிலா சஷ்டி விரதம், அனந்த விரதம் என ஏகபட்ட விரதங்கள் உண்டு எனினும் பெருமாளுக்கு உகந்த மாதமாகவே அறியபடுகின்றது

சனிகிழமை விரதம், மகாலய அமாவாசை போன்ற பல விஷயங்கள் இம்மாதத்தில் நடக்கவிருக்கின்றன‌

இது வைணவர்களுக்கான மாதம் என அறியபட்டாலும் உண்மையில் எல்லா பிரிவினருமே விரதம் இருந்து அருள்பெறும் காலம்..

விரதமிருந்து பகவானை வழிபடும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்களின் பக்திக்கு பகவான் அருள் புரியட்டும்