ஆளும் வர்க்கம் மாறி இருகலாமே தவிர, ராஜ நீதிகள் மாறவே இல்லை
அன்று நமக்கு கல்வி மறுக்கபட்டது, பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்… என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது
அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை
இந்தியாவில் வெள்ளையன் வருவதற்கு முன்பு என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது
இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது
நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது
அதிலும் பாருங்கள் எங்கிருந்தோ வந்த யுவான் சுவாங் கற்றானாம்
ஆனால் இங்கிருப்பவர்களை பிராமணர் கற்க விடவில்லையாம், நம்பி கொள்ளுங்கள்
வாழ்க்கைக்கு தேவையான கல்விகள் குரு ஒருவரிடமிருந்து கற்கபட்டது, அது விவசாயமோ, சிற்பமோ, நகை தொழிலோ, எதுவோ
வாழ்கைக்கு தேவையானதை மட்டும் கற்றார்கள், கசடற கற்றார்கள்.
அரச வர்கத்திற்கு மட்டும் சில சிறப்பு கல்விகள் தரபட்டன , அதுவும் பரம்பரை பரம்பரையாக வந்ததே தவிர புதிதாக ஏதுமல்ல
அதுவும் ராஜநீதி, போர்வியூகம், ஆட்சிமுறை, வரி வசூல் என்றே இருந்தது
மற்றபடி வாழ்க்கைக்கான கல்விகள் எல்லோருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி இருந்தது
இதில் பிராமணரின் பங்கு பஞ்சாங்கம் பார்ப்பது உட்பட சில, அதில் ஆலயபணிகள் இருந்தன.
புத்த சமயமும், சமண மதமும், ஆதீனங்களும் இங்கு கல்வி பணி செய்யத்தான் செய்தன, மறுக்க முடியாது, எழுத வாசிக்க கூட்டல் கழித்தல் கொஞ்சம் நீதி நெறிகள் வாழ்க்கைக்கான தத்துவங்கள்
இதில் சில தற்காப்பு பயிற்சியும் கை மருத்துவமும் உண்டென்கின்றார்கள்
உடற்பயிற்சி முதல் ஓவிய பயிற்சி,ஓலை சுவடி படிப்பது வரை சொல்லி கொடுத்தார்கள்
யானை, மாடு,குதிரை போன்ற விலங்குகளை பழக்குவது எப்படி பயன்படுத்துவது எப்படி என போதிக்கபட்டது
அக்காலத்தில் விரும்பிய கலையினை படிக்கும் வாய்ப்பு இருந்தது , யாருக்கும் மறுக்கபடவில்லை
எழுதபடிக்க விரும்பியவர்கள் படித்தார்கள், குறிப்பாக வியாபாரத்தில் இருந்த செட்டி சமூகம் அப்பொழுதே கணக்குகளை கற்பதை வழக்கமாக வைத்திருந்தது
மருத்துவச்சி கூட எல்லா சாதியிலும் இருந்தார், நாட்டு வைத்தியர்கள் கூட தங்கள் கலையினை இன்னொருவருக்கு கற்றுகொடுத்தே வளர்த்தனர்
ஆம் உலோக அறிவு, விவசாய அறிவு, கற்களை வெட்டும் நுட்பம், மிருகங்களை பயன்படுத்தும் அறிவு, காலநிலை பற்றிய அறிவு, மண் அறிவு, நீர் மேலாண்மை அறிவு போன்ற வாழ்க்கைக்கு தேவையான கல்வியும் அறிவும் அன்றே இருந்தது
எல்லா வகை உலோகங்களை உருக்கும் கலையும், மூலிகைகளை பயன்படுத்தும் வித்தையும் இங்கு அத்துபடியாக இருந்திருக்கின்றது
அந்த இந்திய சமூகம் உலகின் பணக்கார சமூகமாக இருந்தது
ஆம் அவர்கள் அதிகம் எல்லாமும் படிக்கவில்லை, ஆனால் அவரவருக்கு என்ன வேண்டுமோ அதை நன்கு கற்று தொழிலை நன்கு செய்தார்கள்
நாடு நன்றாய் இருந்தது, செல்வத்தில் திளைத்தது, அறிவில்லா, கல்வியில்லா கூட்டமெனில் அது எப்படி சாத்தியம்?
அலெக்ஸாண்டர் முதல் கோரி, கஜினி ஏன் ராப்ர்ட் கிளைவ் வரை இந்நாட்டின் வளத்தை தேடித்தான் வந்தார்கள்
இங்கு வாழ்க்கை கல்வியே பிராதனமாய் இருந்தது, உலக சிந்தனை மாற, நவீன பாடங்கள் வர வர, காலம் மாற மாற பள்ளிகளை வெள்ளையன் தொடங்கினான்
அதன் பின் இப்பொழுது காணும் பள்ளிகள் வந்தன
ஏதோ 16ம் நூற்றாண்டு வரை இங்கு ஐன்ஸ்டீனின் தியரியும், ஏரோ நாட்டிக்கல் கல்வியும், இன்னும் நவீன கல்வியும் இருந்தது போலவும், அன்றே டாக்டர்கள ஸ்தெஸ்கோப்போடு அலைந்தது போலவும்
அதை எல்லாம் பிராமணர் செய்து மற்றவர்களை அடிமை படுத்தியது போலவும் இங்கு ஏகபட்ட கட்டுகதைகள்
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை அன்றிருந்த வாழ்க்கைக்கான கல்வி எல்லோருக்கும் கிடைத்தது
பிராமண சமூகம் ஆலயங்களையும் அரசனையும் நம்பி வாழ்ந்த ஒரு பிச்சைக்கார சமூகமாகவே இருந்தது
ஆம் ஒரு மன்னனை பிராமணன் என காட்ட முடியுமா? ஒரு ஜமீனை பிராமணன் என காட்டமுடியுமா?
நிச்சயம் முடியாது
அது அரசனுக்கு அடிமையாக இருந்தது அந்த கூட்டம், அரசன் பஞ்சாங்கம் கேட்டால் கொடுக்க வேண்டும், அவன் ஆலோசனை கேட்டால் சொல்ல வேண்டும்
அவன் களைத்திருந்தால் ஆடல் பாடல் என உற்சாக படுத்த வெண்டும், அதற்கான கலைகளை கற்றிருக்க வேண்டும்
(சங்கீதமும், ஆடல் பாடல் கலைகளும், இசை கருவி கலைகளிலும் அவர்கள் வித்தகர் ஆனது இப்படித்தான், அரசனுக்காகத்தான் )
அப்படியே 4 பாடலையும் பாட வேண்டும், அவனுக்கும் ஆண்டவனுக்கும்
ஆம் அரசனை சுற்றியே, அவனை அண்டி பிழைத்தே அவர்கள் வாழ்வு இருந்தது
அக்கால மன்னர்கள் பக்தி மிக்கவர்கள் என்பதால் ஆலயத்தில் அவர்களையே அமர்த்தினான், அது அரச முடிவு
ஆலயத்திற்கும் அரசனுக்கும் அடிமை கூட்டமாகவே பிராமண சமூகம் இருந்தது, அவர்களுக்கும் ஒரு மண்ணாங்கட்டி உரிமையுமில்லை
அவர்களுக்கு நிலபுலனோ பெரும் ஆட்சி அதிகாரமோ இல்லை
மன்னர்கள் சரிய, ஆலயங்களும் சரிய அந்த இனம் வெள்ளையனிடம் ஒட்டிகொண்டது
அப்பொழுதும் அவர்கள் ஆங்கிலம் கற்று வெள்ளையன் அரசில் வேலையாட்களாக இருந்தார்களே தவிர வேறொன்றுமில்லை
முதலில் மன்னன் சொன்னதை செய்தவர்கள், வெள்ளையன் சொன்னதையே செய்தார்கள்
இந்த மனுநீதி மண்ணாங்கட்டி எல்லாம் என்றோ காலாவதியானவை, இங்கு நடந்தது பலமாதிரியான ஆட்சி கடைசியாக பிரிட்டன் ஆட்சி
இதில் மனுநீதி எங்கிருந்து ஆண்டது?
அதுவும் இந்தியாவில் சுல்தான்கள் ஆட்சி வந்தபின் ஆலயங்களை தவிர பிராமணருக்கு வேறு இடம் இல்லை என்ற அவல நிலை வந்தபின் எங்கிருந்து மனுநீதி ஆளும்?
பிராமணன் ஒரு காலமும் ஆளவில்லை, உண்மையில் மக்களை சாதிவாரியாக பிரித்தாண்டது ராஜ தந்திரம்
ஆம், பிரித்தாளும் சூழ்ச்சியினை பிரிட்டானியருக்கு சொல்லி கொடுத்ததே இந்திய ராஜநீதி, அன்றிருந்த அமைப்பு
மக்களை ஒன்றுசேர விட கூடாது, அது ஆட்சிக்கு ஆபத்து ஒவ்வொரு தொழிலாக பிரித்து கொடுத்து உழைக்க சொல்லிகொண்டே இரு, அதில் வேறுபாடுகள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒருவகை ஆளும் தந்திரம்
அதை அன்றே அரசர்கள் செய்தார்கள், ஆனால் குடிமக்களுக்கு ஆபத்து என்றால் காக்க தவறவில்லை
உண்மையில் ராஜநீதியே, அவர்களின் அணுகுமுறையே சாதிய சிக்கலுக்கு அடிப்படை
அந்த அரச நீதியியே பின்னாளில் பிராமணர் மேல் பழியாய் விடிந்தது, சாதி பிராமணர் உருவாக்கி பின்பற்றியது என பழிசுமக்க வைத்தது
தனக்கு அடிமையான பிராமண சமூகம் உருவாக்கிய சாதியினை மன்னன் ஏற்பானா? நொடியில் களைந்திருக்கமாட்டானா?
ஏன் களையவில்லை
அது தனக்கும் தன் ஆட்சிக்கும் சாதகம் என கண்டான், அப்படியே விட்டுவிட்டான், சாதி ஒழித்த ஒரு மன்னன் உண்டா?
இந்து மன்னரை விடுங்கள், இஸ்லாமிய மன்னர்களே செய்யவில்லையே ஏன்?
அவன் நினைத்தால் நொடியில் ஒழிக்க முடியாதா? ஆனால் ஏன் செய்யவில்லை
ஏன்? சாதியினை உருவாக்கி பலனடைந்தது அவர்களே, சாட்சாத் அவர்களே பின் எப்படி களைவார்கள்??
ஆக அரசனிடம் அண்டி பிழைத்து அப்படியே வெள்ளையனிடம் பணிசெய்ததே பிராமண இனம் எனும் மைனாரிட்டி இனம்
அவர்களை குறிவைத்துதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் அரசியலும்
சில சமூகங்களுக்குள்ள கட்டுபாடுகளும் சில பழக்கவழகங்களும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்
அது எல்லா இனங்களுக்குமானது, பிராமணருக்கு மட்டுமல்ல, எல்லா இனங்களிலும் சில தனித்துவ பழக்கங்கள் உண்டு
மற்றபடி அவர்கள் யாரின் வாழ்வினை கெடுக்கவுமில்லை, யார் கல்வியினையும் தடுக்கவுமில்லை.
கிளப்பிவிடபடும் கதைகளும், படுபயங்கர வரலாற்று திரிபுகளும் எல்லாமே அரசியல், அதை தவிர வேறொன்றுமில்லை
உண்மையில் சாதிகள் அரசனால் அன்று அங்கீகரிக்கபட்டன, அதில் சில அனுகூலம் இருப்பதை தெரிந்த மன்னன் அப்படியே ஏற்றுகொண்டான்
அதுவே ராஜ்நீதி, நாட்டுக்கும் அரசனுக்கும் நல்லது என அக்காலமும் ஒப்பும் கொண்டது
அதை இஸ்லாமிய சுல்தானும் மாற்றவில்லை,, ஆங்கில பிரெஞ்ச் ஆட்சியாளரும் மாற்றவில்லை
ஆம் அவர்களுக்கு அனுகூலமிருந்தது, ஆளும் வர்க்கத்திற்கு சாதி வேற்றுமை எந்நாளும் அவசியம் எனும் தந்திரம் இருந்தது
அந்த ராஜநீதியினைத்தான் அவனை அண்டி இருந்த பாவத்திற்காக பிராமண சமூகம் சுமந்து தொலைத்தது.
அன்று மன்னர்கள் காட்டிய அதே வழியினைத்தான் , அதே வகையில்தான் இன்றைய அரசியல்வாதிகளும் அதே சாதியில் அயோக்கிய அரசியல் செய்கின்றனர்
ஆளும் வர்க்கம் மாறி இருகலாமே தவிர, ராஜ நீதிகள் மாறவே இல்லை