புரட்டாசியில் எதற்கு விரதம்

புரட்டாசியில் எதற்கு விரதம் என சிலர் கேட்கலாம், அவர்கள் அறிவு அவர்கள் சிந்தனை

முன்னோர்கள் வகுத்து வைத்த ஏற்பாடு இப்படித்தான் சொல்கின்றது , அதாவது சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி, ஜாதகவிதிபடி அது 6ம் இடம்

அது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என சாஸ்திரத்தில் சொல்லபடும் , அது வேறொன்றுமில்லை கடன், நோய் மற்றும் எதிரிக்கான இடம்

இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடா விஷயங்கள் ஆனால் இந்த மூன்றும் மிகுவதோ, குறைவதோ நமது கர்மவினைகளால் விளைவது என்கின்றார்கள்

அப்படிப்பட்ட கர்ம கெடுபலன்களை குறைக்கவும், நற்பலன்களை அதிகரித்துக் கொள்ளவும் வழிகாட்டுகிறது புரட்டாசி

பித்ருக்கடன் எனும் முன்னோர் வழிபாடு செய்து பித்ருக்கடனை தீர்ப்பதும் இந்த புரட்டாசி மகாளய அமாவாசையில் தான்

கடன், நோய், பகை எனும் மூன்றில் இருந்தும் நாம் விடுபட விரதம் இருத்தல் வேண்டும்,
யூதருக்கும் இஸ்லாமியருக்கும் புத்தமதத்தாருக்கும் விரதகாலம் இருப்பது போல இது இந்துக்களுக்கனாது

விரதம் இருப்பதும் மலை உச்சிக்கு செல்வதும் உடலுக்கு நல்லது நோய் அண்டாது, மலையேறி பெருமாளை வணங்க சொல்லும் தத்துவம் அதுவே

நோய் அகல அது வழி.

பித்ருக்கள் ஆசி வழங்கும்பொழுது கடனும் பகையும் ஒழியும் என்பதும் ஐதீகம்

நோய்கள் பரவும் மழைமாதமகாவும் இன்னும் சில காரணங்களுக்கு கர்த்தாவாகவும் புரட்டாசி இருப்பதால் அன்றே இம்மாதத்தில் விரதத்தை ஏற்படுத்தினர் முன்னோர்

அதை முறைபடி பின்பற்றினால் நிச்சயம் நோய் தீரும், பிணி அகலும்

புரட்டாசி விரதத்தில் மூட நம்பிக்கை என எதுவுமில்லை மாறாக கண்ணுக்கு தெரியா சூட்சும ரகசியங்கள் நிறைய உள்ளன