ரஜினி என்னமோ சொல்லிவிட்டார்

ரஜினி என்னமோ சொல்லிவிட்டார் அது ஈயம் பூசியது பூசாதது என பல திமுகவினர் கிளம்பியாயிற்று

இதை தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் கலைஞர் கருணாநிதி

அவரின் பதில் எல்லாமே தலையினை பிய்க்கும் அளவுக்குத்தான் இருக்கும், திராவிடம், ஈழம், பெரியாரியம் இன்னும் ஏகப்பட்ட இடங்களில் ஈயம் பூசியது அவர்தான்

உதாரணத்துக்கு ஈழபோரில் பிரபாகரன் கொல்லபட்டால் வருந்துவீர்களா?

“பிரபாகரன் அல்ல யார் கொல்லபட்டாலும் வருந்துவேன்”

ஆயிரகணக்கில் சாகின்றார்களே

“ஆம், வருந்தி கொண்டே இருக்கின்றேன்”

தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு உண்டா?

சிண்டு மூட்டும் கேள்விக்கு பதில் சொல்லமாட்டான் கருணாநிதி

உங்கள் ஆட்சியில் கோவையில் குண்டு வெடித்தது பற்றி குண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என்கின்றார் ஜெயா:

அம்மையார்தான் குண்டாக தெரிகின்றார், அந்த கலாச்சாரத்தை சொல்லியிருப்பார்

இப்படியாக எந்த கேள்விக்குமே நேரடியாக பதில் சொல்லமால் , நிருபர்கள் பக்கத்தில் இருக்கும் நாற்காலியினை உடைக்கும் அளவு பதில் சொன்னவர் கருணாநிதி

அவர் சொன்னால் அது ராஜதந்திர பதில் அதையே ரஜினி சொன்னால் உளரல்..

அவர் கட்சியில் இருந்து கொண்டு ரஜினியினை கலாய்க்கின்றார்களாம், பரிதாபத்துகுரியவர்கள்