பொருளாதாரம் நாசம்
பொருளாதாரம் நாசம், நாசம் சர்வநாசம் என ஒருபக்கம் சில கோஷ்டிகள் ஒப்பாரி வைத்து கொண்டே இருகின்றது
அவர்களில் சிலரை பிடித்து “நீ என்ன இழந்தாய் என கேட்டால் எனக்கு ஒன்றும் இழப்பில்லை” ஆனால் பத்திரிகைகள் அப்படி சொல்கின்றன என தோளை குலுக்கிகொண்டே சொல்கின்றார்கள்
கட்சி மாநாடுகள் அதன் போக்கில் இருகின்றன, ரஜினி படத்தின் வியாபாரம் பலநூறு கோடிகள் என அசால்ட்டாக சொல்கின்றார்கள்
நகைகடை, ஜவுளிகடை எதுவும் மூடபட்டதாக தெரியவில்லை எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓடிகொண்டிருக்கின்றது, புதிது புதிதாக திறக்கின்றார்களே அன்றி மூடபட்டதாக தெரியவில்லை
கறிகடையோ இல்லை கரிகட்டை கடையோ எல்லாம் நிரம்பிவழிகின்றது, எல்லா பெட்ரோல் பல்க்கிலும் கூட்டம் பெட்ரோல் நிரப்பிகொண்டே தான் இருக்கின்றது
நாடு அதன் போக்கில் இயங்குகின்றது
ஆளாளுக்கு கத்துகின்றார்களே தவிர எதையும் ஆதார பூர்வமாக யாராலும் காட்டமுடியவில்லை என்பதுதான் நிஜம்
நாமும் இந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கபட்ட நாடுகளை பார்க்கின்றோம், உண்மையில் நெருக்கடி என்றால் அதை சொல்லி முடியாது
வங்கிகளில் நாம் போட்ட பணம் இருக்காது, கையில் இருக்கும் பணத்துக்கு எதுவும் வாங்கமுடியாது, வேலை இழப்பும் இன்னும் பல சூழலும் சேர்ந்து மக்களை போராட அழைத்து வரும்
இங்கு ஏன் போராட்டம் வெடிக்கவில்லை?
காரணம் எளிது, அவனவன் ஒழுங்காக வேலைக்கு செல்கின்றான் அதற்கு ஆபத்தில்லை, அவனின் கைபொருளுக்கு ஆபத்தில்லை
பொருளாதார நெருக்கடி என்றால் அரசு ஊழியருக்கு சம்பளம் வரை கொடுக்கமுடியா நிலை, வங்கிகள் கைவிரிக்கும், சம்பளமின்றி யார் பணியாற்ற வருவர்?
நிர்வாகம் தடுமாறும், அரசு அலுவலகங்கள் இயங்கா , காவல்துறையும் ஏன் ராணுவமே கைகட்டி நிற்கும் நாடு நாசமாகும்
ஆம் உண்மையான நெருக்கடி என்றால் அதுதான், அப்படி ஒரு நிலை இத்தேசத்தில் என்றுமில்லை இனியும் வராது, இந்நாட்டின் தன்மை அப்படி
சுருக்கமாக சொன்னால் பணம்,வேலையிடம், உடல்நலம், உணவு என எல்லாவற்றுக்கும் இத்தேசம் மிக உறுதியான பாதுகாப்பினை வழங்கியிருகின்றது
உண்மையான நெருக்கடி என்றால் இந்த 4ல் ஒன்றிரண்டு குறையும் அல்லது 4மே குறையும், பாதிக்கபடும் ஜனம் போராட வரும்
இங்கு அப்படி எதுவுமில்லை, அவரவர் வேலையினை பார்த்தபடி முகநூலிலும் டிவிட்டரிலும் பொங்கிவிட்டு மறுபடி கொத்துபரோட்டா சாப்பிட செல்லமுடிகின்றது
பத்திரிகைகள் காட்டும் பிம்பம் அப்படி, அவைகள் அப்படித்தான்
அட பொருளாதார நெருக்கடி என்றால் பொருளும் இன்னும் பணமும் இல்லாமல் பத்திரிகை மூடபடவேண்டுமா இல்லையா?
அவர்கள் தொழில் மிக வேகமாக நடந்துகொண்டே இருக்கும் ஆனால் அவர்கள்தான் அழுதுகொண்டும் இருப்பார்கள்
அழுவதும் புலம்புவதும் மக்களை ஒருவித பயத்திற்கும் விரக்த்திக்கும் இழுத்து செல்வது இந்திய பத்திரிகா தர்மம்
தமிழக பத்திரிகைகள் அந்த யழவு தர்மத்தை மிக அழகாக ஆத்ம சுத்தியுடன் கடைபிடிக்கின்றன