திராவிட அலப்பறைகள்
இந்தியா எனறொரு நாடே இருந்ததில்லை இது இந்திய யூனியன் : திராவிட அலப்பறைகள்
சரி இந்தியா என்றொரு நாடே இருந்ததில்லை என ஒரு வாதத்துக்கு வைத்துகொண்டால் கூட திராவிடம் என்றொரு வார்த்தை எங்கே இருந்தது?
எந்த நாடு அப்படி இருந்தது? எந்த மன்னன் அதை ஆண்டான்?
தமிழ்நாடே சேரசோழ பாண்டி நாடு என இருந்தது இது போக தொண்டைமான், அதியமான், கடையேழு வள்ளல் கணக்கு தனி
கன்னியாகுமரியினை எடுத்தாலே வள்ளுவநாடு, ஈழநாடு , நாஞ்சில் நாடு என ஏகபட்ட நாடுகள் இருக்கும் போல
இதில் அவர்களுக்குள் தீரா போர்கள் வேறு , மூவேந்தருக்குள் ஒரே அடிதடியும் போரும் சாவும் இல்லை மூவேந்தரும் சேர்ந்து எவனையாவது அடிப்பதும் கொல்வதும் அதை ஒரு புலவன் பாடுவதுமாக இருந்திருகின்றது
பூராவும் ஒரே அடிதடியும் ரத்தசகதியுமாக இருந்திருக்கின்றது, இதுதான் தமிழனின் வீர வரலாறு
அதாவது 10 மைலுக்கு ஒரு நாடு இருந்திருக்கின்றது
இந்த 10 மைலை கடந்த புலவனே “யாதும் ஊரே யாவரும் கேளிர்..” என பாடியிருக்கின்றான், மற்றபடி அவன் என்ன பிரிட்டனில் பாடினானா இல்லை பாரீசில் கவிதை சொன்னானா?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை 15 மைலை கடந்துதான் இந்த மாபெரும் தத்துவத்தை சொன்னான், அப்படி பல நாடுகளாகத்தான் தமிழகமே இருந்திருக்கின்றது
இந்தியா என்பது யூனியனாம் ஆனால் தமிழகம் மட்டும் தனி நாடாக இருந்ததாம்
இந்தியா ஒரு யூனியன் என்றால் தமிழகம் யூனியன்களின் யூனியன் என்ற வகையில் வரலாறு கையில் பிரம்போடு இவர்கள் முதுகில் சாத்த தயாராக இருக்கின்றது