இந்த யோகியின் புத்தகம் அப்படியே இயேசுவின் வார்த்தைகளை முன் வைக்கின்றது
இந்த யோகியின் புத்தகம் அப்படியே இயேசுவின் வார்த்தைகளை முன் வைக்கின்றது, நிச்சயம் இந்த யோகி கிறிஸ்தவர் அல்ல, அவரின் போதனைகளை கேட்டிருக்கவும் முடியாது
பசியால் துடிக்கும் அவர் ஒரு இடத்தில் அவர் அவரின் குரு சொல்கின்றார், “கடவுளின் அருளால் அல்லாமல் உணவில் பலனால் உயிர்வாழ்வதாக எண்ணாதே”
ஆம் பைபிளில் இயேசு சாத்தானிடம் சொன்ன அந்த வார்த்தை “மனிதன் அப்பத்தினால் அன்றி கடவுளின் வார்த்தையால் உயிர்வாழ்கின்றான்”
ஞானிகளும் யோகிகளும் ஒன்று போல சிந்திப்பார்கள், போதிப்பார்கள் என்பது இதுவேதான்