30 ஆண்டு கால விவகாரம் அது
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக பிரசித்திபெற்ற வழக்கான திருவட்டார் கோவில் நகை கொள்ளை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறபட்டது, கிட்டதட்ட 30 ஆண்டு கால விவகாரம் அது
கேரளம் வித்தியாசமான பகுதி, மலையும் இன்னும் பல விவகாரங்களும் அவர்களுக்கு தனி வேலியாயின
வடக்கத்திய ஆலயங்கள் ஆப்கானிய கொள்ளையர்களால் அழிக்கபட்டதை போல, தென்னக பகுதிகள் சுல்தானின் ஆட்சியில் சிக்கியதை போல கேரளம் முழு சவாலை எதிர்கொள்ளவில்லை, அங்கு இந்து மன்னர்கள் ஆட்சியே நிலைத்தது வெள்ளையன் வரும் வரை அதுதொடர்ந்தது
எனினும் அக்கால மன்னர்கள் தங்க புதையலை பத்மநாபசாமி கோவில் போல ஒளித்து வைத்திருந்தனர் அது போக தங்கம் கொட்டிகிடந்த ஆலயம் சில உண்டு
அதில் ஒன்றுதான் திருவட்டார் ஆலயம்
அந்த ஆலயத்தில் படுத்திருக்கும் திருமால் தங்கத்தால் ஆனவர், இது போல ஆதிகேசவ பெருமாள் உட்பட பல சாமிகள் உண்டு , சாமிகளுக்கு ஏகபட்ட நகைகள் உண்டு
அது 1990களில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது, சாமி சிலையிலே 6 கிலோ தங்கம் எலி கடித்தது போல கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டபட்டது
1990களில் இது பெரும் பரபரப்பானது, அந்த மணடைகாடு கலரங்களுக்கு பின் இந்த ஆலய நகை கொள்ளை பெரும் பொருளானது, பல போராட்டங்கள் எல்லாம் நிகழ்ந்தன
மண்டைக்காடு கலவரத்தால் ராமசந்திரனுக்கு சிக்கல் வந்தது போல தனக்கும் நிகழலாம் என அஞ்சிய ஜெயலலிதா 1992ல் விசாரணைக்கு உத்தரவிட்டார், அந்த உத்தரவு வந்ததும் ஆலய தர்மகர்த்தா உட்பட சில தற்கொலைகள் நடந்தன
பின்பு அந்த தர்மகர்த்தாவும் ஆலய ஊழியர்களும் முறையாக பூசை செய்து சோழி உருட்டி பிரசன்னம் பார்த்து ஆலய தங்கத்தை ஆட்டையினை போட்டது கண்டறியபட்டது
கிட்டதட்ட 15 கிலோவுக்கும் மேல் தங்கமும், மதிப்பில்லா வைரமும் களவாடபட்டது உறுதியானது
நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டது 27 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 23 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் தங்கமும் வைரமும் மீட்கபட்டதா என்றால் இல்லை, இந்தியாவின் பீனல்கோடும் அம்பேத்கர் எழுதிய மென்மையான சட்டமும் அப்படி இருக்கின்றன
இருக்கட்டும்
தெய்வம் களவாளிகளை கண்டறிந்ததாக ஆத்திகவாதிகளுக்கு திருப்தி
ஏழை எளியவர்களை பார்ப்பனன பூஸாரிகள் ஏமாற்றி சேர்ந்த நகை இப்படித்தான் போகும், ஆலயம் கொடியவர்களின் கூடாரம் என தலைவர் இதைத்தான் சொன்னார் என அந்த கோஷ்டிக்கு உற்சாகம்
தமிழனை சுரண்டி கேரள மகாராஜா கொடுத்த நகை எல்லாம் இப்படித்தான் போகும் என்பது நாம் தமிழர் கோஷ்டியின் சந்தோஷம்
ஆக ஆளாளுக்கு ஒவ்வொரு சந்தோஷம், புரட்டாசி மாதத்திலாவது என் நகை திரும்ப வராதா? என அந்த ஆதிகேசவபெருமாள் மட்டும் கவலையோடு படுத்திருக்கின்றார்
