இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது

இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது இனி கடந்த 6 மாதத்தில் 3ம் தேர்தலை அந்நாடு சந்திக்கும் போல தெரிகின்றது

ராணுவம் உளவு பொருளாதாரம் விஞ்ஞானம் என அசத்தும் தேசம் இஸ்ரேல், அதை எல்லாம் அந்த அந்த துறை பார்த்துகொள்ளும், ஆட்சியாளர் யார் என்பதில்தான் அங்கு கடும் விழிப்பு

பொதுவாக உளவு, ராணுவம் இவற்றில் சாத்தவர்கள் மட்டுமே அங்கு வெற்றிபெறமுடியும் இந்த நெதன்யாகு சாதாரண ஆசாமி அல்ல , உகாண்டா எண்டபேயில் இவர் அண்ணன் உயிரை விட்டார்

இவரோ இன்னொரு விமான கடத்தலில் காலில் குண்டு பாய்ந்த நிலையிலும் தீவிரவாதிகளை கொன்றுவிட்டு மக்களை மீட்டவர்

அந்த சாகசகாரருக்கே அங்கே இந்த நிலை, அட இவர் என்ன எகுல் ஓல்மார்ட் என்ற மாபெரும் சாகசகாரர் அங்கு ஊழலுக்கு சிறையில் இருக்கின்றார்

அங்கு அப்படித்தான், “இந்த சாகசம் தீரவீரமெல்லாம் நாட்டிற்கு ஒருவன் செய்யும் கடமை அவ்வளவுதான், நீ செய்யாவிட்டால் இன்னொருவன் செய்வான். விஷயம் உன் ஆட்சி பற்றியது..” என அவர்கள் கடும் கவனமாய் இருப்பார்கள்

ஆனானபட்ட கோல்டா மேயரும், மோஷே தயானுமே அங்கு அரசியலில் ஆடிகொண்டுதான் இருந்தார்கள்

அப்படிபட்ட இஸ்ரேலில் இப்பொழுதும் கூட்டணி ஆட்சியே, அதுதவறினால் மறுபடி தேர்தல்தான்

நாட்டுக்காக பெரும் சாகசங்களை செய்தவர்கள் எல்லாம் அங்கு அப்படி மக்களால் ஆட்டிவைக்கபடுகின்றார்கள், நாடு வளமும் பலமும் கொண்டதாய் இருக்கின்றது

ம்ம்ம் அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும், இந்தியாவில் குறிப்பாக‌ தமிழ்நாட்டில் அதை நினைத்தாலே பெருமூச்சுதான் வரும்