சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் நடந்தது

என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான்

ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது

எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் பின்பே பல சீர்திருத்தம் தொடங்கபட்டு அது 1947ல் சுதந்திரமாக முடிந்தது

1857ல் நடந்ததுதான் முதல் இந்திய விடுதலைபோரா என்றால் இல்லை, 1500களில் வாஸ்கோடகாமா கால் வைத்ததில் இருந்து அவனை கொன்று இத்தேசம் தன் போராட்டத்தை தொடக்கியது

ஆங்கிலபடைகளில் இருந்த சிப்பாய்கள் அவர்களை எதிர்த்ததை மருத நாயகம் தொடங்கி வைத்தான்

1806ல் வேலூர் கோட்டை புரட்சியே 1857 புரட்சிக்கு முன்னோடி, ஆனால் வரலாறு வட இந்தியாவினை முன்னுறுத்துவதால் வேலூர் புரட்சி பின்னுக்கு தள்ளபட்டது

உண்மையில் வேலூர் புரட்சி என்பது திப்பு சுல்தானின் வாரிசுகள் நடத்திய வீரப்போர்,

அது இருக்கட்டும் 1857ல் என்ன நடந்தது?

இந்துமதம் மகா உயர்வானது, அது இயற்கையோடு இணைந்தது, கிட்டதட்ட எல்லா மிருகங்களையும் அது தன் மதத்தின் ஒரு அங்கமாகவே இணைத்துகொண்டது.

காகம் பித்ரு, மயில் முருகனுக்கு, சிம்மம் துர்க்கைக்கு, புலி ஐயப்பனுக்கு, யானை பிள்ளையாருக்கு, எருமை எமனுக்கு, கருடன் விஷ்ணுவுக்கு,குரங்கு அனுமாருக்கு, மான் சீதைக்கு, என சகல விலங்குகளையும் தன் மதத்தோடு இணைத்துகொண்ட மதம் அது.

அப்படியானால் இந்துக்கள் எல்லோரும் ஜெயின்களை போல மகா சைவமாக இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. தமிழ்நாட்டில் அசைவமான மீன் வங்கத்து பிராமணருக்கு சைவமாயிற்று.

இந்துமதம் எல்லாவற்றையும் இப்படி ஏற்றுகொள்கின்றது, சிலவிஷயங்களை சகித்துகொள்கின்றது

1854ல் இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனியின் நிலம், இந்திய அடிமை வீரர்களுடன் திபெத், ஆப்கன் என அக்கம்பெனி கடும் யுத்ததில் இருந்த நேரம். ஆப்கனையும் பிடித்து , அப்படியே உஸ்பெக் பிடிது, ரஷ்யா பிடித்து “அகண்ட இந்தியா” அமைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தது.

காரணம் ஐரோப்பாவிற்கு நிலவழிச்சாலை துருக்கி வழியாக ஐரோப்பா சென்றது, அது அப்பொழுது ஆட்டோமான் துருக்கியர் வசம் இருந்தது, வலுவான அரசு அது, பிரிட்டிசாரை சுக்குநூறாக்கும் பலம் அவர்களிடம் இருந்தது.

பலசாலியிடம் ஒருநாளும் மோதமாட்டான் பிரிட்டிஷ்காரன், இதோ இப்பொழுது சிரியாவில் யாராவது ரஷ்யாவிற்கு எதிராக இறங்குவார்களா? ம்ஹூம்.

இதனால் பட்டுசாலையினை குறிவைத்து திபெத்தையும், நிலம் வழியாக ரஷ்யாவினை அடைவதற்காக ஆப்கனையும் குறிவைத்து கம்பெனியின் யுத்தம் நடந்தது

அப்படி ஆப்கன் போரில் புதுவித தோட்டாக்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்தார்கள், அன்று கீரீஸ் ஆயில் இல்லை, அதனால் தோட்டா சுலபமாக வெளியேற பசு கொழுப்பு அல்லது பன்றிகொழுப்பு பூசபட்ட தோட்டாக்களை கொடுத்தார்கள், சில நேரங்களில் அந்த உலோக உறை பற்களால் இழுக்கபடும் அவசியமும் இருந்தது.

பசு கொழுப்பு இந்து வீரன் வாயிலும், பன்றி கொழுப்பு இஸ்லாமிய வீரன் வாயிலும் பட முடியுமா? பட்டால் சும்மா இருப்பார்களா?

கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கிழக்கிந்திய கம்பெனி அடங்கவில்லை. வீரர்கள் புரட்சியில் இறங்கினர். புரட்சி என்றால் தலைவர்,தளபதி,திலகம் வரிசை புரட்சி அல்ல வெள்ளையரை அடித்துவிரட்டுவது.

அது பெரும் கலவரமாகி 1857ல் சிப்பாய் கலகமுமாகி, கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசால் எடுத்துகொள்ளபட்டு, கம்பெனி முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தது.

இந்த பசு,பன்றி தகறாறு மட்டும் இல்லை என்றால் ஆப்கன் தாண்டி கிழக்கிந்திய கம்பெனி பிடித்திருக்கும், இந்த நாடும் பிரிட்டிஷ் அரசுக்கு சென்றிருக்காது.

இன்றைய ஊழல் அரசுகளை போல ஜாம் ஜாம் என்றிருந்த கம்பெனி நொடிந்துபோனது இப்படித்தான், அந்த சாம்ராஜியத்தை அசைத்தது பன்றிகறியும், மாட்டுகறியும்.

ஆம் மிக உணர்வுபூர்வமான விஷயத்தை கைவைத்தால் என்னாகும் என்பதை ஆனானபட்ட பிரிட்டிஷ்காரனுக்கே சொல்லிகொடுத்த சம்பவம் இது

அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக போராடியிருகின்றார்கள், ஒரு மத ஒற்றுமையும் சகிப்புதன்மை சகோதரத்துவம் இருந்திருக்கின்றது

அதில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, வரலாறு அதை மறைக்கின்றது என்கின்றது ஒரு தியரி

அதாவது பசுகொழுப்பு இந்துக்களுக்குத்தானே எதிரி உங்களுக்கு என இஸ்லாமியரிடமும், பன்றிகொழுப்பு அவர்களுக்குத்தானே விலக்கு உங்களுக்கு எதற்கு என இந்துவீரர்களிடம் சொல்லபட்டதாகவும் எம் சகோதரர்கள் மனம் புண்பட நாம் நடக்கமாட்டோம் என இருதரப்புமே வாதிட்டதாகவும் அதை கண்டு பிரிட்டானிய கம்பெனி அச்சபட்டதாகவும் தகவல் உண்டு

ஆனால் இவை எல்லாம் வரலாற்றில் இல்லை எனினும் அன்று மத ஒற்றுமை இருந்திருகின்றது, ஒன்றாக சேர்ந்து பிரிட்டனை ஓட அடித்திருக்கின்றார்கள்

அந்த கலகத்தில் உயிரிவிட்டு கிழகிந்திய கம்பெனியின் காட்டாட்சிக்கு முடிவு கட்டி, பிரிட்டன் அரசு வந்து இந்தியா ஓரளவு உரிமை பெற காரணமான அந்த தியாகிகளுக்கு மகத்தான அஞ்சலி

அப்படியே இந்திய மத விவகாரம் எவ்வளவு சிக்கலானது என சொன்ன கிழக்கிந்திய கம்பெனிக்கும் நன்றிகள்

அப்படி இருந்த கிழக்கிந்திய கம்பெனி 1857க்கு எப்படி இருக்கின்றது?

அந்த மாபெரும் சாம்ராஜ்யம் மதவிவகாரங்களை மதிக்கா ஒரே காரணத்திற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இன்று பெட்டி கடையாக சுருங்கி லண்டன் தெருவில் இருக்கின்றது, ஒரு இந்தியந்தான் வாங்கி இருக்கின்றார்

1857 சிப்பாய் கலகம் தோல்விதான், ஆனால் அடுத்த 90 ஆண்டுகளில் இத்தேசம் விடுதலை அடைய அதுதான் வழிகாட்டிற்று

1857 மே 10ம்தேதி தொடங்கிய கிளர்ச்சி இந்தே செப்டம்பர் 20 1857ல் முடிதது வைக்கப்ட்டது

இதன் பின்பே இந்து இஸ்லாமிய வீரர்களை பிரித்துவைக்கும் வஞ்சக திட்டம் ஆங்கிலேயருக்கு உருவானது, முன்பே திப்பு சுல்தான் வீரர்களை அப்படி பிரித்துத்தான் அவனை வீழ்த்தினார்கள்

மதரீதியாக இந்தியாவினை பிரிக்கும் விஷயம் அதன்பின்பே வேகமெடுத்தது, அந்த விதைகளை விதைத்தான் வெள்ளையன்

அது தேசபிரிவினையில் வந்து கலவரத்திலும் காந்தி கொலையிலும் முடிந்தது

இன்றும் அணுகுண்டுகளுடன் மோத இரு தேசமும் காத்திருக்கின்றது

இதற்கெல்லாம் மூலகாரணம் அன்று 1857ல் இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து செய்த அந்த கிளர்ச்சி

அதில் இருந்து இன்றைய இந்தியர் கற்றுகொள்ளவேண்டியபாடம் ஏராளம் உண்டு, வரலாற்றில் இருந்துதான்பலவற்றை கற்கமுடியும், கற்றுகொள்வதில் தவறில்லை