மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா

சவுதியின் மேல் நடத்தபட்ட தாக்குதல் அமெரிக்கா மேல் சில விஷயங்களை கிளப்புகின்றன அதை மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா

விஷயம் ஒன்றுமில்லை ஹவுத்தி கோஷ்டி அராம்கோ எண்ணெய் நிலையத்தை ஏவுகனை மற்றும் ட்ரோன் மூலம் கடந்தவாரம்தாக்கியது நமக்கு தெரியும் அதற்கு முன்பே சவுதி விமான நிலையம், அரண்மனை என சில இடங்களை தாக்கியது வரலாறு

இதனால் அமெரிக்கா தன் பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு சாதனங்களை சவுதிக்கு கொடுத்தது, சவுதி அதை அரோம்கோ பக்கமும் நிறுத்தியது என்கின்றார்கள்

சம்பவத்தன்று 20 பறக்கும் குண்டுகள் அதாவது ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் அரோம்கோ இலக்கினை தாக்க வந்தபொழுது இந்த பேட்ரியாட் சிஸ்டம் எதிர் ஏவுகனைகளை அனுப்பியது அதில் ஒன்றுதான் எதிர் ஏவுகனையினை அழித்தது, மீதி 19 ஏவுகனைகள் இலக்கை தாக்கின‌

ஆக அமெரிக்காவின் பேட்ரியாட் சிஸ்டம் தோல்வி படுதோல்வி என விஷயம் கிளம்ப அவமானத்தில் கண்கள் சிவக்கின்றது அமெரிக்கா

உண்மையில் அமெரிக்காவிடம் உள்ள மிக நவீன சிஸ்டம் தாட் எனப்படும் தடுப்பு சிஸ்டம், அதை ஏன் சவுதிக்கு வழங்காமல் பழைய பேட்ரியாட் சிஸ்டத்தினை வழங்கினார்கள் என்றால் அதுதான் ராஜ தந்திரம், ராணுவ தந்திரம் இன்னும் ஏக இன்னபிற‌

இந்த பேட்ரியாட் சிஸ்டம் 1990 வளைகுடா போரில் இஸ்ரேலில் நிறுவி முதலில் சோதிக்கபட்டது, சதாமின் ஸ்கர் ஏவுகனைகளை சமாளிக்க நிறுவபட்டது, அன்றே இது தோல்விதான் ஆனால் சதாமிடம் ஸ்கர்ட் ரக ஏவுகனை தீர்ந்ததால் பேட்ரியாட்டின் தோல்வி அமுக்கபட்டது

அமெரிக்கா அதை பின்பு தலைகீழாக பழுதுபார்த்து அது சரியானதாக சொன்னது, கூடுதலாக முற்றிலும் வேறு தொழில் நுட்பத்தில் தாட் சிஸ்டத்தை உருவாக்கியது

தாட் சிஸ்டம் அவர்களின் நம்பர் 1 சிஸ்டம் அதை ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவுக்கு எதிராக நிறுவ பார்த்தார்கள், ஜப்பான் தென்கொரியாவிலும் சில முகாமில் உண்டு

ஆனால் சவுதிக்கு பேட்ரியாட் சிஸ்டம்தான் கொடுப்பார்கள், ஏன் என்றால் அப்படித்தான் இஸ்ரேல் உட்பட பலசக்திகள் அதைத்தான் விரும்பும்

இந்த பேட்ரியாட் இப்பொழுது மறுபடியும் பல்லிளித்துவிட்டது, சவுதி அரசர் அமெரிக்காவினை பார்த்து இதானா உங்க டக்கு என்பது போல் பார்க்கின்றார், அமெரிக்கா சாரி டெக்கினிக்கல் பிராப்ளம் என்பது போல் முடித்து கொண்டது

இந்த பேட்ரியாட் சிஸ்டத்தை ரஷ்யாவின் எஸ் 400க்கு பதிலாக துருக்கிக்கி கொடுக்கும் திட்டம் இருந்தது , இது பல்லிளித்ததை பார்த்த துருக்கி ஒருமாதிரி அமெரிக்கா நோக்கி தலையசைக்க அமெரிக்கா கடும் அப்செட்

விஷயம் கசிவதை கண்ட ரஷ்யா சும்மா இருக்குமா? உடனே அது எங்கள் எஸ் 400 இதை எல்லாம் சமாளிக்கும் உடனே வாங்குவீர், வேறு எங்கும் எமக்கு கிளைகள் இல்லை என கிளம்பியாயிற்று

இன்றைய உலகில் பாதுகாப்பான வான் பாதுகாப்பு தடுப்பு என இஸ்ரேலின் அயர்ன் டோம் தவிர ஏதுமில்லை, சும்மா பின்னி எடுக்கின்றது. ஒரே நேரத்தில் 400 ஏவுகனைகள் வந்தாலும் அசராமல் சமாளிக்க்கின்றது அவர்களின் சிஸ்டம்

மற்றபடி அமெரிக்காவின் தாட் மற்றும் ரஷ்யாவின் எஸ் 400 எல்லாம் களத்தில் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

சரி இஸ்ரேல் எப்படி அயர்ன்டோமை இவ்வளவு அழகாக செய்தது

விஷயம் ஒன்றுமில்லை இதே பேட்ரியாட் சிஸ்டத்தை சதாம் உசேன் காலத்தில் இஸ்ரேலுக்கு கொடுத்ததது அமெரிக்கா, அது தோல்வி

அமெரிக்கா சதாமை தேடிகொண்டிருக்க இஸ்ரேல் மகா பொறுமையாக பேட்ரியாட்டை கழற்றி என்னவெல்லாமோ கற்று அதை ஆரோ எனும் எதிர்ப்பு ஏவுகனையாக உருவாக்கி பின் ரேடாரில் சில மாற்றங்களை செய்து அட்டகாசமான சிஸ்டமாக மாற்றிவிட்டது

அவர்கள் அப்படித்தான், பைபிளில் வரும் 5 தாலந்தை இன்னும் பலமடங்காக பெருக்கிய கூட்டம் அது

சவுதி அப்படி அல்ல ஒரு தாலந்தை புதைத்து வைத்தவகை நாடு, அதாவது எதை கொடுத்தீர்களோ அதை அப்படியே பத்திரமாக வைத்திருந்து பாதுகாத்து திருப்பி தருவார்கள், அவ்வளவு நல்லவர்கள்