பெரும் சிக்கல் உருவாகிவிட்டது

உலக நாடுகளின் பெரு நகரங்களில் ஒரு பெரும் சிக்கல் உருவாகிவிட்டது, அது சடலங்களை அடக்கம் செய்வது

ஜப்பான் போன்ற நாடுகள் அடுக்குமாடி குடியிருப்பு போல அடுக்குமாடி கல்லறைகளை அமைத்தாலும் அது வளர்ந்துகொண்டே செல்கின்றது

சில பெருநகரங்களிலில் கல்லறை நிலம் அதாவது 6 அடி நிலம் வாங்கும் செலவு சில லட்சங்களை தாண்டுகின்றது,

இது எல்லோருக்கும் சாத்தியமில்லை

இதனால் உலகம் இந்துக்களின் பாதைக்கு திரும்புகின்றது

ஆம் எரித்துவிடுகின்றார்கள், எரித்துவிட்டு சாம்பலை ஆற்றில் கலந்துவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

கல்லறை அமைத்து பழக்கபட்ட சமூகம் எரித்த உடலின் சாம்பலை 1 அடி அல்லது அரையடி நிலம் வாங்கி புதைக்கின்றது

கல்லறை அமைக்கும் பழக்கம் குறைகின்றது, பரபரப்பான உலகில் தொலைதூர இடுகாடுகள் கல்லறை பராமரிப்பு என பல விஷயங்களை யாரும் தேடுவதில்லை

நகரின் பெரும் மக்களுக்கு கல்லறை நிலங்களும் ஈடுகொடுக்கமுடியவில்லை, நிலம் விலை விண்ணை முட்டுகின்றது

குழந்தைகள் பிறக்கும் அளவுக்கு இறப்புகளும் நிகழ்வதால் கல்லறை மாபெரும் சிக்கலான விஷயமாக பெருநகரங்களில் ஆகிவிட்டது,

வீட்டையே புறாக்கூடு போல அப்பார்ட்மென்ட் என ஆக்கிவிட்ட நகரங்கள் கல்லறைக்கு எங்கே செல்லும்?

பழைய கைவிடபட்ட கல்லறைகளை என்ன செய்வது என புதிய தலைமுறைக்கும் தெரியவில்லை

இதனால் எரிக்கும் கலாச்சாரம் பெருகிவருகின்றது

“விட்டுவிட போகுதுயிர் ..சுட்டுவிட போகின்றனர்” என்ற பட்டினத்தாரின் வரிகள் அகிலமெங்கும் கேட்க தொடங்கிவிட்டன‌

இந்துக்கள் அன்றே உலகின் மிக எளிமையான ஆனால் தத்துவமான வழியினை உலகிற்கு சொல்லியிருக்கின்றார்கள் என இந்து தத்துவங்களை ஆச்சரியமாக பார்க்க்கின்றது உலகம்

ஆம் இறந்தபின் ஒன்றுமில்லை, கல்லறை அமைப்பது இரு தலைமுறைக்கு சரி அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அது தொந்தரவு, 7ம் தலைமுறையில் வரும் ஒருவனுக்கு அவனின் முப்பாட்டன் சமாதி முதல் தந்தை சமாதிவரை பார்க்க நேர்ந்தால் அவன் சமாதியினையே சுற்றி சுற்றித்தான் வருவான்

ஊரும் உலகமும் சமாதியால் நிறைந்திருக்கும், இதை தடுக்கும் நோக்கில்தான் அன்றே உடலை எரிக்கும் வழக்கத்தை பாரத தர்மம் சொல்லியிருக்கின்றது

அற்புதமான ஏற்பாடு அது, அதன் பலன் இப்பொழுதுதான் உலகுக்கே புரிகின்றது

எல்லோரும் ஒருநாள் சாம்பலாவோம் என நெற்றியில் பூசிதிரியும் சமூகம் அல்லவா இது?

ஒன்றுமே இல்லாதது வாழ்வு எனும் தத்துவத்தை ஆலயம் முதல் சுடுகாடு வரை சொல்லும் மார்க்கம் அல்லவா?

சிவனையே சுடுகாட்டில் ஆடும் கடவுள் என குறித்து வைத்த அந்த மதம் உலகுக்கே பல விஷயங்களில் வழிகாட்ட தொடங்கிவிட்டது

இந்த உலகம் எங்கேயும் முட்டட்டும் மோதட்டும், ஒரு நாள் இந்த தர்மத்தின் ஒவ்வொரு ஏற்பாட்டின் பின்னிருக்கும் நுட்பமான விஷயங்களுக்காக இதை சிலாகித்து அதன் பக்கம் வந்தே தீரவேண்டும்