மோசமான ஆட்கொல்லி நோய்
உலகமெல்லாம் புற்றுநோய், எய்ட்ஸ், இதயநோய், நீரிழிவினை விட மோசமான ஒரு நோய் மோசமான ஆட்கொல்லி நோய் ஒன்று பரவிவருவதை கண்டு சர்வதேசம் அஞ்சுகின்றது
சில நாடுகள் அந்நோயில் இருந்து தன் மக்களை மீட்க சிறப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதும்
ஆம் அதன் பெயர் மனநோய், இந்த கடும் வாழ்க்கை நெருக்கடியும் அது கொடுக்கும் அழுத்தமும் ஏராளமானோரை அந்த நோயில் தள்ளுகின்றது
மற்ற நோய்களை போல இது உடலை பாதிப்பதில்லை மாறாக இம்மாதிரியான அழுத்தம் தற்கொலை இல்லை வேறுமாதிரியான போதை பழக்கம் இல்லை ஆரோக்கியமில்லா செயல்களில் இளம் தலைமுறையினை தள்ளுகின்றது
விபத்து போன்ற ஆபத்துகள் இன்னும் தீவிரவாத இணைவு அல்லது பல சமூக சீர்கேடுகளுக்கு இது காரணமாகின்றதாம்
நல்ல மனநலமில்லாதோர் எப்படி நல்ல சந்ததிகளை உருவாக்கி தேசம் காக்க போகின்றார்கள் என அச்சபடும் தேசங்கள் கடும் நடவடிக்கையில் இறங்கிவிட்டன
இதற்கு மூலகாரணமாய் அவை கண்டறிந்திருப்பது என்னவென்றால் பணியும் கல்வியும் இன்றைய விஞ்ஞான வாழ்வு கொடுக்கும் தனிமையுமே ஆகுமாம்
பணம் ஒன்றே பிரதானமிக்க வாழ்வு என்றாகிவிட்ட கல்வியும், வாழ்வும் மானிட வாழ்வினை எந்திரமாகிவிட்டன
பன்னெடுங்காலமான மானிட வாழ்வு சடுதியில் புரட்டிபோட்டிருக்கின்றது இந்த காலம், இதுகாலம் குடும்பம் சமூகம் பக்தி இயற்கையோடு இணைந்தவாழ்வு என வந்த மானிட உலகுக்கு இது புதிது
மானிட இனம் இயற்கையோடே பயணித்து பழகியது, இயற்கைக்கு உயிரும் உணர்வும் உண்டு
அந்த மானிட இனத்தை எந்திரங்களோடு பழகவிடும்பொழுது அதுவும் கடும் நெருக்கடியில் மிஷினோடு மிஷினாக உழைக்க சொல்லும்பொழுது மனம் எதிர்வினை காட்டி குழம்பிவிடுவதாக நிபுணர்கள் சொல்கின்றார்கள்
எந்திரங்களின் ஓட்டத்துக்கு சரியாக ஓட மானிட மனம் இன்னும் பழகவில்லை என்பதும் மனம் அதற்கு அமுக்கபடும் பொழுது கொடுக்கபடும் எதிர்வினையே மனநோய் என்கின்றது உளவியல் உலகம்
பள்ளி முதல் பணியிடம் வரை பளு குறைப்பு, நல்ல மன அமைதிதரும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் குழு விளையாட்டுகளை ஏற்படுத்துதல் மானிட வாழ்வின் நோக்கம் பணம் மட்டுமல்ல என்பதை தெரியவைத்தல் என பல மனநல மீட்புகள் நடக்கின்றன
குறிப்பாக தனித்து வாழாதே , சேர்ந்துவாழ் எனும் தத்துவம் மேல்நாட்டில் வேகமாக சொல்லிகொடுக்கபடுகின்றது
நமது கூட்டுகுடும்ப தத்துவம் அது
இதனால் மனநோயின் தாக்கம் விரைவில் கட்டுபடுத்தப்ட்டு ஒழிக்கபடும் என பல நாடுகள் நம்புகின்றன
தமிழகத்தில் மனநோயாளிகள் முன்பு இனமான தமிழன், சுயமரியாதைக்காரன், திராவிடன் என சுற்றின, அவைகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன
இப்பொழுது மனநோயாளிகள் உடன்பிறப்புக்கள், தும்பிக்கள் என சுற்றுகின்றனர் இது தமிழக எதிர்காலத்துக்கு நல்லதல்ல
இதனால் அவர்கள் சம்பந்தபட்டோர் அவர்களின் மனநோயினை போக்க நடவடிகை எடுத்தால் அது மிகபெரும் தேச சேவையாக அமையும், மற்ற நாடுகளும் நிம்மதியடையும்