திமுகவினர் உன்னை குறிவைத்துவிட்டார்கள்
நீ அதிகம் எழுதிவிட்டாய் திமுகவினர் உன்னை குறிவைத்துவிட்டார்கள் என்கின்றனர் சில நலம் விரும்பிகள்
எம்மை விட மிக மிக மட்டமாக திமுகவினை விமர்சித்த வைகோ,செந்தில் பாலாஜி , தஙகதமிழ்செல்வன் போன்றோர் இன்று நல்ல மதிப்புடன் ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்திருகின்றனர்
வைகோவினை எம்பியாக ஆக்கிவிட்டனர் திமுகவினர்
இன்னொரு கட்சியாக இருந்தால் கட்சியே அழிந்தாலும் சரி என வைகோவினை கருப்பு துண்டால் இறுக்கி கொன்று அறிவாலய கொடிகம்பத்தில் தொங்கவிட்டிருப்பார்கள்
ஆனால் இயேசுவும் புத்தனுமே கண்டு நாம் கூட இப்படி இல்லையே என கலங்கும் பரோபகரமான கட்சி திமுக
செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆகிவிட்டார், தங்க தமிழ்செல்வன் திமுக கொள்கைகளையே தன் திருவாயால் பரப்ப பதவி பெற்றுவிட்டார்செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆகிவிட்டார், தங்க தமிழ்செல்வன் திமுக கொள்கைகளையே தன் திருவாயால் பரப்ப பதவி பெற்றுவிட்டார்
இதனால் உறுதியாக சொல்கின்றோம் நாம்எவ்வளவு கழுவி ஊற்றினாலும் இன்பநிதி காலத்தில் எம்மையும் எம்.பியாக்கி அழகு பார்க்க இப்பொழுதே குறித்து வைத்திருப்பார்கள் அந்த மகா நல்லவர்கள்
வேறொன்றும் இருக்க முடியாது