சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன‌

இந்தியா பாகிஸ்தான் பிரிந்து எல்லை எரிந்து இன்னும் அடிக்கடி இரு நாடுகளும் ஒட்டுமில்லை உறவுமில்லை என சொல்லிகொண்டாலும் சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன‌

பிரிவினையில் பாகிஸ்தானுக்கு சென்ற இஸ்லாமியரின் சொத்து எதிரி சொத்து எனப்படும், அதை இந்திய அரசு இன்னும் முழுமையாக கைபற்றவில்லை பாகிஸ்தான் அழிச்சாட்டியம் செய்யும்

குறிப்பாக ஜின்னா மும்பையில் வாழ்ந்த பங்களா இன்றும் உண்டு, அது எதிரி சொத்து அதனால் இந்திய சொத்து என இந்தியா சொல்லி கையபடுத்த முயன்றாலும் அது பாகிஸ்தான் தந்தையின் நினைவாலயம் என மல்லுகட்டுகின்றது பாகிஸ்தான், சிக்கல் இன்னும் முழுக்க தீரவில்லை

எனினும் ஒரே நாளில் அமித்ஷா புல்டோசர் வைத்து இடித்துவிட்டு பூகம்பத்தில் இடிந்துவிட்டது என கூலாக சொல்லும் நாள் வரலாம்

இந்த கோஹினூர் வைரத்தை இந்தியா திருப்பி கேட்டாலே, அய்யய்யோ அது லாகூரின் வைரம் எங்களுக்குத்தான் சொந்தம் ஆளுக்கு பாதியாவது கொடுங்கள், அதை இரண்டாக உடையுங்கள் என்றெல்லாம் வம்பு செய்யும் நாடு அது

இந்த வம்பு வரிசையில் இன்னொரு விஷயமும் உண்டு, அது ஐதரபாத் நிஜாமின் கோடிகணக்கான பணம், அது எப்படி சர்ச்சையானது என்றால் இப்படித்தான்

பிரிட்டிஷ் இந்தியாவில் அவனின் நேரடி ஆட்சி தவிர மன்னர்கள் மூலம் அவன் ஆண்ட பகுதி உண்டென பார்த்தோம் அல்லவா? ஐதராபாத் சமஸ்தானம் அப்படி ஆளபட்டது

சும்மா சொல்லகூடாது அன்றைய இந்தியாவில் பஞ்சாப் வங்கம் மைசூர் சமஸ்தானங்களை விட பன்மடங்கு பணக்கார சமஸ்தானமாக அது விளங்கியது, அன்றைய இஸ்லாமிய மன்னர்களில் அரேபிய சுல்தான் புரூனே சுல்தான் எல்லாம் பணக்காரர் இல்லை, காரணம் எண்ணெய் பணம் அன்று இல்லை

அன்றைய அரபு சுல்தான்கள் ஓட்டகங்களில் சென்று பேரிட்சை பழம் பொறுக்கினார்கள், ஒரு பயலும் அவர்களை கண்டுகொள்ளவில்லை மாறாக பரிதாபட்டார்கள்

ஆனால் துருக்கி சாம்ராஜ்யம் இஸ்லாமியரின் முதல் பணக்கார வலிமையான சாம்ராஜ்யமாக இருந்தது, அந்த துருக்கி சுல்தான் தன் மகளை ஐதரபாத் நிஜாம் வீட்டிற்கு கொடுத்தார் என்றால் ஐதரபாத் நிஜாமின் அன்றைய நிலையினை புரிந்து கொள்ளுங்கள்

அந்த ஐதரபாத் சுல்தான் வெள்ளையன் வெளியேறியதும் தனி நாடாக நீடிக்க விரும்பினார், எனக்கும் வெள்ளையனுக்கும்தான் உறவு , டெல்லிக்கும் எனக்கும் என்ன என்பது போல் அவரின் நடவடிக்கை இருந்தது

ஆனால் இம்மாதிரி அடம்பிடித்த சுல்தான்களை மண்டையில் போட்டு அனுப்பிவிட்டு அவர்கள் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்து கொண்டிருந்தார் பட்டேல், ஐதரபாத் நிஜாமுக்கும் எச்சரிக்கை விடபட்டது

ஐதரபாத் நிஜாம் துருக்கியினை அழைத்தார், அது பழைய துருக்கி என்றால் வந்திருக்கும் ஆனால் முதல் இரு உலகபோர்களால் அது வலுவிழந்து ஐரோப்பாவின் நோயாளி என் ஏளனம் செய்யபட்ட காலம் என்பதால் துருக்கி வரவில்லை

மன்னர் பாகிஸ்தானை அழைத்தார் ஆனால் காஷ்மீரிலே அடிவாங்கிய பாகிஸ்தான் இப்பக்கம் வர நினைக்கவில்லை

ஐதரபாத் நிஜாம் தந்திரமாக ஆடினார், தெற்கே ஒரு பாகிஸ்தான் வேண்டுமென இஸ்லாமியரை திரட்டினார், இரு பாகிஸ்தானின் உண்மை முகத்தை கண்ட தென்னகம் அமைதி காத்தது

மன்னர் யோசித்தார், தனிநாடாக நீடிக்க இந்தியா விடாது, யுத்தம் வரும் வந்தால் நம் பணம் என்னாகும்? இதனால் தன் திவானிடம் பெரும் பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப சொன்னார், நிலமை சிக்கலனால் அங்கு தப்ப ஏற்பாடு என சொல்லிகொண்டார்.

ஆனால் இந்தியா ஐதரபாத்தை பிடித்து இணைத்தபின் அவரை கவுரவமாக நடத்தியது, மனம் மாறிய நிஜாம் இந்தியாவிலே தொடர முடிவு செய்தார், ஐதரபாத் சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்தது, இப்பொழுது கூட நம் தமிழிசை அக்கா பட்டேல் வாழ்க என சொல்லிவிட்டுத்தான் கவர்ணராகியிருப்பார்

பட்டேலின் அணுகுமுறை அப்படி இருந்தது, கொஞ்சம் சொதப்பினாலும் ஐதரபாத் இன்னொரு காஷ்மீர் அல்லது வங்கதேசம் ஆகியிருக்கும்

மனம் மாறிய நிஜாம் பாகிஸ்தானிடம் அந்த பணத்தை திரும்ப கேட்க, மன்னர் பாகிஸ்தானுடன் இணையாத கோபத்தில் இருந்த பாகிஸ்தான் அது உன் திவான் அனுப்பியது அது கள்ள பணம் கருப்புபணம் இஸ்லாம் பணம் என வம்பிழுத்தது

பணம் நாட்வெஸ்ட் வங்கி மூலமாக அனுப்பபட்டது, நிஜாம் முந்தி கொண்டதால் பணம் பாகிஸ்தானுக்கும் செல்லவில்லை வங்கியிலே நின்றது

நிஜாம் லண்டனில் வழக்கு தொடர்ந்தார், அப்பொழுது அவர் இந்திய பிரஜை என்பதால் பாகிஸ்தான் அவர் மன்னரே அல்ல, அது பழைய கணக்கு சுதந்திர இந்தியாவுக்கு இதை அனுப்ப கூடாது என என்னவெல்லாமோ சொல்லி 1954ல் வெற்றிபெற்றது

மன்னர் தரப்பு இழுத்தடித்தது, பெரும் சிக்கல் வழக்கானது இது

ஆம் நவாப் ஐதரபாத் மன்னராக இருந்தபொழுது தனி அரசர், இப்பொழுது சமஸ்தானமே இல்லை எல்லாம் ஒருமாதிரி கலந்தாகிவிட்டது பின் எப்படி திருப்பி யாரிடம் கொடுப்பது என்ற சிக்கலில் விஷயம் இழுத்தது

நிஜாமும் போயாகிவிட்டது கொள்ளுபேரனும் வந்தாயிற்று ஆனால் வழக்கு இன்னும் முடியவில்லை

இன்று கிட்டதட்ட 600 கோடிக்கும் மேலாக வந்து நிற்கின்றது அந்த பணத்தின் மதிப்பு

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்தமாதம் அறிவிக்கபடும் என்கின்றது லண்டனின் ராயல் நீதிமன்றம்

இப்பொழுதும் இந்த பணம் ஆப்பரேஷன் போலோ என பட்டேல் படை எடுத்து வந்தபொழுது பாதுகாப்புக்காக கொடுத்து வைத்த பணம் என்கின்றது நிஜாம் தரப்பு

இல்லை இல்லை அவர்கள் தனிநாடாகவும் தெற்கு பாகிஸ்தானாகவும் நாங்கள் ஆதரவு தெரிவித்தோம் அதற்கான நன்றி அல்லது கூலி பணம் இது என்கின்றது பாகிஸ்தான்

பணம் யாருக்கு சொந்தம் என்பது அடுத்தமாதம் தெரியும்

சரி உண்மையில் இந்த பணம் எதற்கு கொடுக்கபட்டது தெரியுமா? இந்திய வரலாற்றை சரியாக படித்திருந்தால் உங்களால் சொல்லமுடியும்

ஆம், இந்தியாவோடு பெரும் போரை நடத்த முடிவு செய்திருந்தார் ஐதரபாத் மன்னர் ஓஸ்மான் அலிகான், ஆயுதம் வாங்க கொடுக்கபட்ட பணம் அது, ஆனால் பின்பு மனதை மாற்றினார் மன்னர்

நவாப்புக்கு கொஞ்சம் ஆயுதங்களை முன்பே கொடுத்தும் மன்னர் பெரும் சண்டையிடாததால் கடும் கோபமுற்ற பாகிஸ்தான் அந்த பணத்தை அன்றே முடக்கியது

இந்த சர்ச்சைதான் இன்றுவரை தொடர்கின்றது.

நம் தமிழிசை அக்கா ஐதர்பாத்தின் கவர்ணராக முடிசூடியபின் வரும் தீர்ப்பு இது, தன் கால் ராசி எப்படி இருக்கின்றது என பார்க்க அக்காவும் லண்டனை பார்த்தபடிதான் அமர்ந்திருக்கின்றது