அண்ணே உங்கள ஜாபர் பாய் தேடுறார்ணே

அண்ணே உங்கள ஜாபர் பாய் தேடுறார்ணே

எதுக்குடா?

அடுத்த வெள்ளிகிழமை தொழுகைக்கு போகணுமாம், அவர் கூட்டிட்டு போவாராம்

தொழுகைக்கா? நானா?

ஆமா அண்ணாச்சி ஒழுங்கா அங்க போயிட்டு அத பத்தியும் எழுதணுமாம், பாய் ரொம்ப ஆசையா இருக்காரு

டேய் வெள்ளிகிழமை வேலைடா?

அதெல்லாம் லீவ் போட்டுட்டு வாரும், வந்துட்டு ஒழுங்கா எழுதும்

இல்லடா….

என்ன நொள்ளடா… ஒழுங்கா பாய் கூட போய் தொழும் அத பத்தி எழுதும்

பாக்குறேண்டா

பக்கத்து கடை சீனன் ரெடியா இருக்கான், புத்தர் கோவிலுக்கு கூட்டிட்டு போவானாம் கூட சிங்களனும் ரெடியா இருக்கான், அதுனால ஒழுங்கா போயிரும்

டேய் ..

ஒழுங்கா போயிரும் இல்லண்ணா ஆள் வச்சி பாய் தூக்கிட்டு போயிருவாரு…”