அப்படித்தான் இருக்கும்

இந்த கீழடியில் மண்பானைகள் எடுக்கபட்டதாம், அவை தீயில் சுடபட்டு கருப்பும் சிகப்புமாக இருந்ததாம், பானையினை சுட்டால் தங்க நிறமா கிடைக்கும்? அப்படித்தான் இருக்கும்

உடனே இந்த மதிமாறன் கோஷ்டி இதுதான் தமிழன் அடையாளம் அன்றும் கருப்பும் சிகப்பும், இன்று திக திமுக கொடி கருப்பு சிகப்புடோவ் பெரியார்டோவ் என கிளம்பிவிட்டது

பெரியாரின் கொடி இந்த தத்துவத்திலா அமைக்கபட்டது?

பெரியார் காங்கிரசிலும், நீதிகட்சியிலும் இருந்து அடித்து விரட்டபட்டபின் தனி இயக்கம் கண்டார் அதற்கு கொடி தேவைபட்டது, கருப்பு கொடி தயாரித்தார்கள்

வெறும் கருப்பு அவர்களுக்கே பிடிக்கவில்லை , இதென்ன கோழிதிருட செல்பவன், சுடுகாட்டு வெட்டியன் போர்த்தும் போர்வை போல் இருக்கின்றதே என திருதிருவென விழித்தார்கள்

அப்பொழுது ஜப்பான் அவர்களுக்கு வழிகாட்டிற்று, ஆசியாவில் யாருக்கும் அடிமை இல்லாத மிக பலமான நாடாக ஆச்சரிய ஜப்பான் அன்று விளங்கிற்று, ரஷ்யாவினை கூட அது விரட்டியிருந்தது

இரண்டாம் உலகபோரில் இந்திய எல்லைவரை வந்த நாடு அது, அந்நாட்டுமேல் இந்தியருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது

நாங்களும் யாருக்கும் அடிமை இல்லை என ஜப்பானிய கொடியினை கருப்பு பின்னணியில் வரைந்தது திராவிட கோஷ்டி

கலைஞரோ நடுவில் இருக்கும் சிகப்பு புள்ளி என் ரத்தம் நானே கையினை கிழித்து வைத்தது என வசனம் பேசினார், ரத்தம் வைக்கபட்ட விரல் இப்படியா மதிமாறன் தோசை போல் வட்டமாயிருக்கும்?

ஜப்பானிய கொடியினை காப்பி அடித்துவிட்டு வரலாற்றையே புரட்டுகின்றது மதிமாறன் கோஷ்டி

மண்சட்டி பிச்சை எடுக்க பயன்பட்டது, திருவோட்டுக்கு முன்பு அதை வைத்துத்தான் பிச்சை எடுப்பார்கள்

இன்று கீழடி மண்சட்டியுடன் மதிமாறனின் திராவிட கோஷ்டி பிச்சை எடுக்க கிளம்பியது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

அவர்கள் தொழில் வேலையே செய்யாமல் பிச்சை எடுப்பது என்பது யாருக்கு தெரியாது