இவர்களுக்கு என்னதான் சிக்கல்?
இவர்களுக்கு என்னதான் சிக்கல்?
ஆதியில் மனிதன் கடவுளை தேடவில்லை, அட ஆதாம் ஏவாளே கடவுள் என்பவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தன் போக்கில்தான் இருந்தார்கள், அவர்தான் தேடி தேடி வந்தார்
விஞ்ஞானமும் அதை சொல்கின்றது மனிதன் சிந்திக்க ஆரம்பிக்க நெடுநாள் ஆயிற்று, காடுகள் மலைகளை விட்டு ஆற்றங்கரையில் நிலையாக வசிக்க ஆரம்பித்தபின்பே சிந்தனை தழைத்தபின்பே அவன் கடவுளை தேடினான்
ஆற்றங்கரையில் எல்லாம் நாகரீகமும் மதமும் தோன்றிய தத்துவம் இதுதான்
எல்லா இனங்களுக்கும் மொழி இருப்பது போல் மதங்களும் உண்டு, தமிழனும் அதற்கு விதிவிலக்கு அல்ல
மதமே இல்லா ஒரு பண்டைய இனத்தை காட்டிவிடுங்கள்? ஒரு இனமும் அப்படி அல்ல
சிந்திக்க தெரிந்த இனம் தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை தனக்கு எட்டிய அறிவில் வழிபட்டு மேம்படுத்தி வைத்து கொண்டது
இந்துமதம் யாராலும் உருவாக்கபடாத தன்மை இதனால்தான்
இந்த மானிட சிந்தனையின் உச்சியில்தான் புத்தன் இயேசு என பலரும் அதுவும் பின்னாளில் வந்தார்கள்
பல லட்சம் ஆண்டுக்கு பின்பே கிறிஸ்து வந்தார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு
அதற்கு வெறும் 500 ஆண்டுகால கீழடியினை வைத்து கொண்டுதான் தமிழன் உலகுக்கே முன்னோடி என கிளம்பிவிட்டது இந்த கோஷ்டி
அதில் தமிழனுக்கு மதமில்லை, ஆக தமிழன் மதமற்றவன் என கிளம்ப்விட்டது எல்லோரும் கடவுளை மறுக்க வேண்டுமாம்
ஏன் அதற்கு 10 ஆயிரம் வருடத்துக்கு முன் அவன் காட்டுமிராண்டி, உடை கூட இல்லை அந்த காலத்துக்கு திரும்பலாமா?
அதை விட முற்பட்ட காலத்தில் மொழியே இல்லை சைகை மொழிதான் அங்கு திரும்பலாமா?
அறிவு இருக்கும் இனம் கடவுளை ஏற்கும், தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை நம்பும், பண்டைய தமிழ் இனம் நம்பிற்று
இவ்வர்களுக்கு அதற்கும் முந்தைய கற்கால மனித இனத்தை போல அறிவும் உடையும் இன்றி திரிந்ததை போல தமிழரும் இருக்கவேண்டும் என்பதே விருப்பம்
ஆம் சிந்திக்க தெரிந்த தமிழின இந்த திராவிட கருப்பு சட்டை கோஷ்டிகளை தூக்கி போட்டு மிதித்துவிடும் என்பதால் அவர்கள் கற்கால தமிழன் போல அறிவின்றி உடையின்றி இருக்க வேண்டும் என்பது இவர்களின் கொடிய ஆசை
அதைத்தான் தமிழனுக்கு மதமில்லை என்கின்றார்கள் இனி தமிழனுக்கு அன்று உடையே இல்லை என்பார்கள் அதன் பின் அக்கால தமிழன் காட்டுக்குள் கிடைத்ததை தின்றுவிட்டு அவன் போக்கில் இருந்தான் நீயும் ரேஷனில் 20 கிலோ அரிசிவாங்கி தின்றுவிட்டு உன் போக்கில் இரு பண்டைய தமிழன் அப்படித்தான் இருந்தான் என்பார்கள்
இவர்கள் சொல்லவரும் தத்துவம் அதுதான்