இந்த திராவிட குஞ்சுகள் கொஞ்சம் பல்டி அடிக்கின்றன
இந்த திராவிட குஞ்சுகள் கொஞ்சம் பல்டி அடிக்கின்றன
கீழடி ஏதோ உலக நாகரிகத்தின் தொடக்கம் என கிளம்பிய அவற்றுக்கு அவை வெறும் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்றவுடன், நாம் தமிழரின் மதம் இந்து என்பதை மறுக்கவில்லை ஆனால் பிராமணன் உள்ளே வந்து பல கொடுமைகளை செய்து தமிழரை மடைமாற்றிவிட்டான் அதைத்தான் சாடுகின்றோம் சொன்னோம் என அதிரடி ஜிம்னாஸ்டிக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்
அவர்கள் வாதபடி பிராமணன் வந்தவனாகவே இருக்கட்டும், ஆனால் பிராமணன் வந்து இந்துக்களை இந்துக்களாக வைத்து கொண்டான்
தமிழரின் பண்டைய மதமான இந்து அவனால் இன்றும் காக்கபடுகின்றது மறுக்க முடியுமா? தமிழனின் கலாச்சாரமும் மதமும் அவர்களால் இன்றுவரை காக்கபடுகின்றது
ஆனால் ஐரோப்பாவில் இருந்தும் அரேபியாவில் இருந்தும் வந்து தமிழரை மொத்தமாய் மதம் மாற்றி அவர்களின் அடையாளத்தையே அழித்துவிட்டார்களே, அந்த ஐரோப்பியரும் அரேபியரும் செய்திருக்கும் சில விஷயங்களை விடவா பிராமணன் செய்துவிட்டான்?
பிராமணன் இங்குள்ள இனமே, சரி அவன் வந்தவனாக இருந்தாலும் இங்கே கலந்து இந்த மதத்தினை பின்பற்றி இன்று இந்துவாக இந்துமத காவலனாக நிற்கின்றான்
எவ்வளவோ இடர்பாடும் இன்னபிற சிக்கலும் வந்தாலும் அவன் அம்மதத்தை விடவில்லை
ஆனால் ஐரோப்பியனும் அரேபியனும் இம்மக்களை தன்மதத்திற்கு மாற்றி பல கலாச்சார அழிவுகளை செய்தான்
அவர்கள ஒப்பிடும்பொழுது பிராமணர் ஒன்றும் அவ்வளவு பொல்லாதவர்கள் அல்ல, அல்லவே அல்ல.
அவர்களால்தான் இம்மதமும் இந்த கலாச்சாரமும் இன்னும் வாழ்கின்றது, அது இன்னும் காலமுள்ள காலமட்டும் தொடரும்
ஆலய பராமரிப்பும் அதை பேணுவதும் சாதாரணம் அல்ல, முழு அர்பணிப்பும் பக்தியும் அவசியம் அதைத்தான் அந்த இனம் செய்தது , செய்கின்றது, இன்னமும் செய்யும்
மற்றவர்கள் 5 நிமிடம் கூடி போனால் 30 நிமிடத்தில் ஆலயம் சென்றுவிட்டு வந்துவிடலாம், ஆனால் 24 மணிநேரம் அங்கே இருந்து காவலும் பராமரிப்பும் இன்னும் சகலமும் செய்து காத்து நிற்பது அவர்களே..
ஜவுளிகடையில் கால்கடுக்க நிற்கும் வேலையாளுக்கும், சாப்பாட்டு கடையில் சர்வராக நிற்கும் தொழிலாளரை போல அவர்கள் சாதாரண ஆலய பணியாளர்கள், ஆழ கவனித்தால் அது புரியும்
ஹோட்டலில் டிப்ஸ் என வைக்கலாம், ஆனால் அர்ச்சனை தட்டில் விழும் சில்லறை பார்ப்பண கொடுமையாம்..
இந்து தர்மத்துக்கும் அதன் நிலைதன்மைக்கும் அடிநாதம் அவர்கள், ஆணிவேரும் அஸ்திவாரமும் அவர்கள்
பிராமணரை வசைபாடி விரட்டினால் இந்துமதம் அழியும் என்றுதான் பகுத்தறிவும் இன்னபிற திராவிட அழிச்சாட்டிய பேச்சும் பேசினார்களே தவிர வேறொன்றும் விஷயமல்ல
இந்துமதத்தின் வேறாக நிற்கும் அவர்களை பழிப்பார்களாம்
ஆனால் ஐரோப்பிய அரேபிய விற்பனர்கள் முன்னால் குனிந்து நின்று அவர்களை வரவேற்பார்களாம், அவர்களால் தமிழனின் மதம் அழிந்து அவன் கலாச்சாரம் அழிந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை
ஆனால் தமிழனின் மதமான இந்துமதத்தை காத்து நிற்கும் பிராமணர்கள் இவர்களின் எதிரிகள் என்றால் நீங்களே உண்மையினை தெரிந்து கொள்ளுங்கள்
இந்து ஆலயத்தான் பார்ப்பான் வாழுகின்றான் அய்யகோ என ஒப்பாரி வைப்பவர்கள், உண்மையில் அவர்கள் தரித்திர கோலத்தில் இருந்தாலும் ஒப்பாரி வைப்பவர்கள், கிறிஸ்தவ பிழைப்புவாத பாதிரிகள் இன்னும் வேற்றுமத குருமார்களின் வசதியான வாழ்வினை பற்றி ஒன்றுமே சொல்வதில்லை
சொல்லவும் மாட்டார்கள் , காரணம் அதுதான் திராவிட தீ, திராவிட சூது..