அவனுகளும் அவனுக சித்தாந்தமும்..
தமிழின் காலம் அகத்தியர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அகத்திய சித்தன் ஒரு சிவனடியார் இமயமலையில் இருந்து வந்தவர்
அவரின் சீடரான தொல்காப்பியரும் சிவனடியார், அவர்தான் தமிழக இலக்கணத்தை முதலில் எழுதினார்
இப்படியாக தொடங்குகின்றது தமிழ்மொழியின் வரலாறு, அது பின் எப்படி வருகின்றது?
தன்னைபாட “முத்தைத் தரு…” என அருணகிரி நாதருக்கு உத்தரவிடுகின்றான் முருகன், சிவபெருமானோ “கொங்குதேர் வாழ்க்கை” என தருமிக்கு பாடலே எழுதுகின்றான்
’உலகெலாமுணர்ந்து…’ சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் அந்த ஈசனே..
இந்த மாணிக்கவாசகருக்கு நரியினை பரியாக்கி கொடுத்தவன் பகவானே
அபிராமி பட்டரின் குரலுக்கு குரலுக்கு முழு நிலவாக காட்சி தந்ததும் அம்பாளே.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடிய அரங்கில் குமரகுருபரருக்கு மீனாட்சி குழந்தையாக வந்து முத்துமாலை பரிசாக் கொடுத்தாள்.
திருஞானசம்பந்தர் கதை உலகறியும்
ஆண்டாள் சொல்லாத தமிழா, அடியார்கள் நாவில் ஒலிக்காத தமிழா, அந்த ஆழ்வார்கள் கொட்டி தராத தேந்தமிழா, எல்லாம் பக்தியில் பிறந்தவை
முருகனுக்கும் விநாயகருக்கும் பாடி பாடி தீர்த்தாள் அவ்வை.
பக்தி இலக்கியம் என்கிற தனிப்பிரிவே உலகில் தமிழில் மட்டும்தான் உண்டு. எல்லா தமிழ் இலக்கிய பாடல்களும் கடவுள் வாழ்திலே தொடங்குகின்றன, கடவுளை வாழ்த்தியே முடிகின்றன
இதற்கு எந்த தமிழ் இலக்கியமும் தப்பவில்லை
தமிழனின் மொழியில் இலக்கியம் முதல் அவன் கட்டிய ஆலயத்தின் கல் வரை பக்தியும் மதமும் கலந்திருந்தது
ஆனால் தமிழனுக்கு மதமே இல்லையாம்….இருட்டில் கிடந்த தமிழனுக்கு பெரியார் வந்து வழிகாட்டிவிட்டு இப்பொழுது உதயநிதியினை அனுப்பியிருகின்றாராம்
அவனுகளும் அவனுக சித்தாந்தமும்..