எங்கே செல்வார்கள்?
தன் பேட்ரியாட் சிஸ்டம் சவுதி அரோம்கோ தாக்குதலில் பல்லிளித்ததை கண்டு கொதித்து போய் இருக்கின்றது அமெரிக்கா
ரஷ்யா வேறு எங்கள் சிஸ்டம் 360 டிகிரி பாதுகாக்கும் ஆனால் அமெரிக்க தயாரிப்பு வெறும் 20 டிகிரி என வெறுப்பேற்றுகின்றது
இப்பொழுது ரஷ்ய எஸ் 400 சிஸ்டம் பெயிலியர் என காட்ட கடும் ஆர்வத்தில் இருக்கின்றது அமெரிக்கா
எங்கே செல்வார்கள்? அங்கேதான் வேறு எங்கே அதை சோதிக்க முடியும்
சிரியாவில் ரஷ்ய எஸ் 300 சிஸ்டம் நிறுவபட்டுள்ளதாக அறிவிக்கபட்டது, இனி அங்கு முறிய அடித்தால்தான் ரஷ்ய முகத்தில் கரி பூசலாம்
இதனால் மிகபெரிய ஆட்டம் சிரிய வான்பகுதியில் இருக்கலாம் என்கின்றன சில செய்திகள், இஸ்ரேலோ “கோட்டான கோடி நன்றி ஜஹோவா..” என தீபாவளி கொண்டாடும் ஆர்வத்தில் இருக்கின்றது