விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன்
இது ராஜாஜி கொண்டுவந்த குலகல்வி திட்டம் அய்யா, இதை படித்தால் மாணவன் கைதொழில் ஒன்றை படித்துவிடுவான், வேலை செய்வான் தொழில் தொடங்குவான் சம்பாதிப்பான்
பின் எப்படி சும்மா இருப்பான்? சிந்திப்பான்? பின் எப்படி திராவிட சிந்தனை வந்து பகுத்தறிவு வளர்ப்பான்?
படிக்கும் மாணவனை கிரிக்கெட், டாஸ்மாக், விஜய்படம் , அஜித்படம் , ரஜினிபடம் என திசைதிருப்பிவிட்டால் அது திராவிடம்
மாணவனை மானாட மயிலாடா, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த சரோஜாதேவி என திருப்பிவிட்டால் அது திராவிடம்
மாறாக படிக்கும் மாணவனின் ஓய்வுநேரத்தில் வேலை கற்க சொல்வது ஆரிய அடிமைதனம், ஏற்கனவே ராஜாஜி கொண்டுவந்த குலகல்வி திட்டத்தின் சூது
இதை திராவிட பூமி எப்படி ஏற்கும்? விரைவில் உமக்கு கொடும்பாவி இருக்கின்றதய்யா, எதையும் தாங்கும் இதயத்துடன் கவனமாக இருந்து தொலையும்..