வராக அவதாரம்

வராக அவதாரத்தை கிண்டல் செய்வார்கள் திராவிட கோஷ்டி

அதெப்படி பன்றி மூக்கில் உலகம் நிற்கும், பன்றிக்கு வாலிபால் தெரியுமா? என அவர்களே அவர்கள் போக்கில் சொல்லி கொள்வார்கள்

ஆனால் முக்கியமான விஷயத்தை மறப்பார்கள்

அந்த வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி மூக்கில் பூமி உருண்டையாக தெரியும்

இது உனக்கு தெரியாதா? என்பதல்ல விஷயம், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது

கலிலியோவுக்கும் கோப்பர் நிகஸுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த உண்மை இந்துக்களுக்கு தெரிந்தது

பூமி உருண்டை என்பது வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியருக்கு தெரிந்தது, அதுவும் போப்பாண்டவர் அப்படி சொன்னவர்களை முழங்காலில் நிறுத்தி தண்டித்த கதை எல்லாம் உண்டு

உலகம் இன்று சொன்னதை பல ஆயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் இந்துக்கள்

பன்றி வந்தது உலகை சுமந்தது என்பது நம்பிக்கைக்கு உட்பட்டது, ஆனால் அன்றே பூமி உருண்டை என்பது இந்துக்களுக்கு தெரிந்தது என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா?

ஐரோபியரும் இன்னும் பல இனமும் உலகம் தட்டையானது என சொன்னதை 16ம் நூற்றாண்டு வரை அப்படி சொன்னதை விட பல்லாயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுக்கு முன்பே பூமி உருண்டை என சொன்னது இந்துமதம்

ராக்கெட் எடுத்து விண்வெளிக்கு சென்று ஒன்பது கிரகம் என விஞ்ஞானம் சொன்னதை பல லட்சம் ஆண்டுக்கு முன்பே 9 கிரகம் சூரியனை சுற்றிவருகின்றது என அசால்ட்டாக சொல்லி கோவிலில் நிறுவியது இந்துமதம்

அது என்றோ சொன்னதைத்தான் ஆதாரபூர்வமாக மேற்குல விஞ்ஞானம் நிறுவிகொண்டிருக்கின்றது, வராக அவதாரம் உட்பட‌

இப்படி நோக்குவதுதான் உண்மையான பகுத்தறிவே அன்றி, அந்த வராகம் என்ன நிறம்? வராகத்துக்கு எவ்வளவு முடி இருந்தது அது எந்த நாட்டு வராகம் என ஆய்வது பகுத்தறிவு ஆகாது

எதையும் இல்லை இல்லை அல்லது கட்டுகதை என சொல்பவன் மாட்டுக்கு சமம், அதற்கு அறிவு அவசியம் அல்ல‌

இம்மாதிரி ஆழ நோக்குவதுதான் பகுத்தறிவு, மானிட அறிவு

அக நாமே உண்மையான பகுத்தறிவுவாதிகள் என்பதில் சந்தேகமில்லை..