நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்?
நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்?
அவனிடம் நிலமில்லை என்பதால் அவன் நிலம் உள்ளோருக்கு அடிமை, அவன் மானமாக உழுது பிழைக்க நிலமில்லை என்பதாலும், எல்லா நிலமும் ஒரே ஒருவனிடம் குவிந்து கிடப்பதாலும் பிரித்து கொடுக்கவேண்டும்
நல்லது, அப்படியே அலுலகத்தில் வேலை செய்பவன் முதலாளிக்கு அடிமை
எவ்வவளவு பேர் தொழிற்சாலை, கம்பெனி என நாயாய் முதலாளி காலில் கிடக்கின்றான்?, எதனால் இப்படி?
அவனவனுக்கு தொழில் இல்லை என்பதுதான் சிக்கல்….
ஆக தொழிற்சாலை அல்லது கம்பெனியினை பிரித்து ஆளாளுக்கு கொடுத்தால் என்ன?
எவனிடம் எது இல்லையோ எது எல்லோரிடமும் குவிந்து கிடக்கின்றதோ? அதை பிரித்து கொடுப்பதுதான் சமூக நீதி
உழுபவனுக்கு நிலம் சொந்தம்
பேருந்தில் ஏறுபவனுக்கு பேருந்து சொந்தம்
வேலை செய்பவனுக்கே கம்பெனி சொந்தம்
வாடகைக்கு வசிப்பவனுக்கே வீடு சொந்தம்
டிரைவருக்கே கார் சொந்தம்
சாப்பிடுவனுக்கே உணவகம் சொந்தம்..
முதலில் மார்க் என்பவனை பிடித்து நாமெல்லாம் பயன்படுத்தும் அவனுக்கு சொந்தமான இந்த முகநூலில் , அவன் மட்டும் பல்லாயிரம் கோடிகணக்கில் சம்பாதிக்கும் பணத்தில் சரி பங்கு வாங்க வேண்டும்..