சிற்பத்தின் அழகைத்தான் பார்ப்பீரா? பொருளை பார்க்கமாட்டீரா?

இது நாத்திக கருப்பு சட்டை மற்றும் தமிழன் இந்து அல்ல என சொல்லும் கும்பல் எல்லாம் சீன அதிபரை வரவேற்கும் நேரம், அதை தொடங்கி வைத்தது பேனர் வைத்து பழனிச்சாமி, தொடர்ந்து முக ஸ்டாலின் வரவேற்க ஆளாளுக்கு ஜின்பெங்கே தீகங்கே சீனத்து டிராகனே என வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள்

அப்படி மாமல்ல‌பலிபுரத்தின் சிறப்பை பற்றி பக்கம் பக்கமாக பேசி சீன அதிபரை வரவேற்றிருக்கின்றது கலிங்கபட்டி சிங்கம்

மாமல்லபுரத்தின் கோவில், சிற்பம் எல்லாம் இந்திய ரூபாய் நோட்டில் வரவேண்டும். அந்த பாண்டவர் சிற்பம், தேர் சிற்பம், பகீரத சிற்பம் எல்லாம் அற்புதமான தமிழர் கலை பொக்கிஷம் என சிங்கம் முழங்கியிருக்கின்றது

அப்படியே கழுத்தில் கிடக்கும் கருப்பு துண்டை இழுத்து வைத்து கேட்கலாம்..

“மிஸ்டர் வைகோ, சிற்பம் எல்லாம் அழகுதான், கலைதான். ஆனால் அது சொல்வதென்ன? இந்துமத அடையாளத்தை அல்லவா?. இந்துமத கோவிலும் சிற்பமும்தானே மாமல்லபுரத்தில் அமைக்கபட்டுள்ளது

சிற்பத்தின் அழகைத்தான் பார்ப்பீரா? பொருளை பார்க்கமாட்டீரா?

ஆக தமிழன் ஒரு இந்து அல்லவா? அதை ஒப்புகொள்வதில் உமக்கு என்ன சிக்கல்?”