சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது

சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது

யாரும் யார் சாதியினை உயர்த்தியும் தாழ்த்தியும், தன் சாதி மட்டும் ஒடுக்கபடுவது போல மகா எளிதாய் எடுக்க முடியும்.

ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க்கை , கேமரூனின் டைட்டானிக் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் உழைப்பு தொழில்நுட்பம் என கத்தும் அதே தமிழன் அதாவது அவை எல்லாம் கற்பனை என உணரும் தமிழன் சாதி ரீதியான தமிழ்படங்களை பார்த்துவிட்டு மட்டும் இது உண்மை, சத்தியம், வாழ்வு, சமூக நீதி என பொங்குவதுதான் ஆச்சரியம்

டைனோசர் படங்களை பார்த்துவிட்டு அவை எத்தனை மாடுகளை உண்கின்றது? எத்தனை டன் சாணி போடுகின்றது என அவன் ஸ்பீல்பெர்க் என்பவருக்கு கடிதம் எழுதி டைனோசரின் வாழ்வினை நேரில் பார்க்க ஆசை என கேட்டால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் சாதி ரீதியான படங்களுக்கு நடைமுறை வாழ்வு விமர்சனம் சொல்வர்களை நோக்க வேண்டி இருக்கின்றது.

சினிமா என்பது யாரும் எந்த வடிவிலும் நினைத்தமாதிரி எல்லாம் பிடித்து வைக்கும் மண் சிலை, அதில் என்ன உண்மை இருந்துவிட போகின்றது?