நவீன கல்வி இங்கு பெரியா பிறக்கும் முன்பே வெள்ளையனால் கொடுக்கபட்டது
இந்த பெரியார் இல்லாவிட்டால்… என வந்து ஒருமாதிரி கோஷ்டிகளிடமும், பெரியாருக்கு முன்னால் பிராமணன் படிக்கவிடவில்லை எனமல்லுகட்டும் அரைத்தமாவு கோஷ்டிகளிடமும் சொல்லிகொள்வது ஒன்றுதான்
பெரியாருக்கு முன்பே இங்கு இரு வழக்கறிஞர்கள் இருந்தார்கள், ஆம் அன்றே பட்டம்பெற்ற வழக்கறிஞர்கள்
ஒருவர் நாடார் சாதி பன்னீர் செல்வம், இன்னொருவர் தாழ்த்தபட்ட ரெட்டைமலை சீனிவாசன்
இவர்களை எல்லாம் பெரியாரும் திராவிட கம்பெனிகளுமா படிக்க வைத்து பட்டம் கொடுத்தன?
இந்த இருவரை போல ஏகபட்டோரை காட்டமுடியும், இந்த தினதந்தி நிறுவணர் குடும்பத்தார் எல்லாம் அந்த வகை..
நவீன கல்வி இங்கு பெரியா பிறக்கும் முன்பே வெள்ளையனால் கொடுக்கபட்டது, அதில் அன்றே எல்லா சாதியும் கற்க தொடங்கியது
ஏன் உங்கள் நொண்ணாத்துரையே இரண்டு எம்.ஏ பட்டம் வாங்கிவிட்டுத்தான் பெரியாரிடம் கதை எழுத வந்தார்
அவரை பெரியாரா படிக்க வைத்தார்?
அவ்வளவு ஏன் கருணாநிதி எழுதி சம்பாதித்து ஒரு அய்யரின் வீட்டை வாங்குமளவு அன்றே நிலமை இருந்திருக்கின்றது,
கருணாநிதிக்கு வீடு விற்க கூடாது என எந்த பிராமணன் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தான்?