சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது

சுதந்திரம் வாங்கும் பொழுதே இந்திய சம்பிரதாய படி ஆட்சிமாற்றம் செய்யுங்கள் என மவுண்பேட்டன் கேட்டுகொண்டதற்கேற்ப‌, திருவாடுதுறை ஆதீனமே ராஜகுருவாக இருந்து செங்கோலை வாங்கி புனித நீர் தெளித்து, மங்கல இசையும் மந்திரமும் முழங்க‌ நேருவிடம் கொடுத்தது

ஆட்சிமாற்றம் செய்யபடும்பொழுது செய்யவேண்டிய சம்பிரதாயத்தை ராஜகுருவாக நின்று செய்தது திருவாடுதுறை இளைய சந்நிதானம்..

இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு

ஆக சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது, இடையில் கொஞ்சகாலம் அது மறக்கடிக்கபட்டிருக்கலாம் ,மறுபடியும் அது மீட்டெடெடுக்கபட்டு ரபேல் விமானம் வாங்கும்பொழுது பின்பற்றபட்டிருகின்றது

அவளவுதான் விஷயம், அந்த மரபை மீட்டெடுத்ததுதான் சிலருக்கு வயிற்றெரிச்சல் என்றால் அது எரிந்துகொண்டே இருக்கட்டும்