வியட்நாமை தொடர்ந்து அமெரிக்கா தோல்வியுற்ற இடம் சிரியா
வியட்நாமை தொடர்ந்து அமெரிக்கா தோல்வியுற்ற இடம் சிரியா என வரலாறு குறித்துகொண்டது
சிரியாவில் நடக்கும் விஷயம் தலைகீழாக மாறிவிட்டது, குர்துகள் பலம்பெற்றால் அது துருக்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் துருக்கி சதிராட்டம் ஆடுகின்றது
துருக்கி குண்டுவீச்சு வடக்கு சிரியாவினை பிடிக்கும் முயற்சி என சிரியா அட்டகாசம் செய்கின்றது, குர்துகளை தொலைத்துவிடும் முடிவில் இருக்கின்றது
குர்துகளுக்கு முழு உதவியும் செய்வது அமெரிக்கா
இப்பொழுது குர்துகளை துருக்கி போட்டு அடிக்கும் வேளையில் அமெரிக்கா சிரியாவினை விட்டு வெளியேறபோவதாக அறிவித்துவிட்டது, இது உலகை அதிரவைக்கின்றது
சிரியாவினை விட்டு அமெரிக்கா கிளம்புவது பெரும் விஷயம் , இதுபற்றி ரஷ்யாவிடம் கேட்டால் அவர்கள் போகட்டும் எங்களுக்குஎன்ன என்பது போல் இருக்கின்றது
துருக்கி ஆடும் ஆட்டத்தை இஸ்ரேல் ரசிக்கின்றது, சிரியாவினை நீ அடித்தால் என்ன? நான் அடித்தால் என்ன சிரியா அழிந்தால் சரி என்கின்றது
துருக்கியினை எதிர்க்கும் திட்டம் ரஷ்யாவிடமும் இல்லை
ஆக குர்துகளை ஒழித்துவிட்டு சிரியாவில் நல்லாட்சி நடத்த ஈரானின் பின்புலத்தில் காட்சிகள் நடக்கின்றதோ என்னவோ?
அமெரிக்காவினை நம்பி ஆயுதம் தூக்கி ஐ.எஸ் எனும் கொடும் இயக்கத்தை விரட்டிய குர்து போராளி குழு திகைத்து நிற்கின்றது
எனினும் அமெரிக்கா சும்மா வெளியேறாது, ஏதும் பெரும் திட்டம் இருக்கலாம் என்கின்றார்கள், இனி மிக பரபரப்பான காட்சிகள் சிரியாவின் வட எல்லையில் நடக்கலாம், துருக்கி ஒரு முடிவோடு வந்துவிட்டது