கடும் பாதுகாப்புகள் தயாராகின்றன‌

பாட்சா படத்தில் ஒரு காட்சி உண்டு

ரஜினியும் ரகுவரனும் சந்திக்க வருவார்கள், அதற்கு முன்பாக இரு தரப்பு அடியாட்களும் கடுமையான சோதனையில் ஒருவர் ஒருவர் சோதிப்பார்கள், எங்கெல்லாமோ ஆட்களை நிறுத்தியிருப்பார்கள்

அப்படி ஒரு மிகபெரும் பாதுகாப்பு சோதனை மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது, சீன அதிபர் பராக் என சீன தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் சீன அதிபரின் பிரத்யோக பொருட்கள் கார்கள் இன்னபிற பாதுகாப்பு விஷயங்கள் எல்லாம் சென்னை வந்தடைந்துவிட்டன‌

உலகின் வல்லரசு அதிபர், அக்கம் பக்கம் தொல்லை கொடுக்கும் வகையில் பலர் கடும் கோபத்தில் பார்க்கபடும் அதிபர் எனும் வகையில் சீன அதிபருக்கு எதிரிகள் அதிகம்

அட உள்நாட்டிலே திபெத்தியன் என்ன ஹாங்காங்க் வாசியிடம் சிக்கினாலே தப்பமுடியாது, அவ்வளவு எதிர்ப்பு

இதனால் கடும் பாதுகாப்புகள் தயாராகின்றன‌

தரையில் போலிசாரும் மாறுவேட உளவாளிகளும் மட்டுமல்ல, வானில் செயற்கைகோளும் கடலில் கப்பலும் அதற்கடியில் நீர்மூழ்கியும் கொடுக்கும் கடும் பாதுகாப்பில் வந்திருக்கின்றது மாமல்லபுரம்