உறவுகளும் ,பாதுகாவலும் , நலன்விரும்பிகளும் இல்லாதோர் நிலை

அமெரிக்காவில் மன்மதன் சிம்பு போல ஒருவன் இருந்திருக்கின்றான், ஆட்டோ சங்கரின் சாயலும் இருந்திருக்கின்றது

3 பெண்கள் கொலை வழக்கில் சிக்கிய அவனிடம் விசாரித்தால் 93 பெண்களை கொன்றிருக்கின்றேன் என இதுவரை சொல்லியிருக்கின்றான், பட்டியல் இன்னும் நீளும் போலிருக்கின்றது

சரி 90க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதுமா தெரியவில்லை, பெற்றோரும் உறவினரும் உடன்பிறந்தோருமா தேடவில்லை என்றால் அங்கேதான் இருக்கின்றது அமெரிக்க கலாச்சாரம்

அங்கு குடும்பம் மற்றும் உறவினரை பிரிந்து ஏன் கணவன் மற்றும் பிள்ளைகளை பிரிந்து பெண்கள் வாழ்வது சாதாரணம், அவர்களை தேடுவாரும் இல்லை விசாரிப்பாரும் இல்லை

அந்த சமூக அமைப்பும் அளவுக்கு அதிகமான தனிநபர் சுதந்திரமும் அதற்கு துணை போகின்றன‌

கிட்டதட்ட தண்ணி தெளித்துவிடும் சாயல்

அப்பெண்கள் போதை மற்றும் இன்னபிற சமாச்சாரங்களில் சிக்கி, சில சமயங்களில் எங்கிருக்கின்றனர் என அவர்களுக்கே தெரியாது

பின் என்னாகும்? ,

கொன்றவனே சொன்னால்தான் உண்டு அல்லது செத்துபோன பெண்கள் வந்துதான் சொல்ல வேண்டும்

உறவுகளும் ,பாதுகாவலும் , நலன்விரும்பிகளும் இல்லாதோர் நிலை இப்படித்தான் ஆகும்..