வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்
இன்று அந்த வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்
சும்மா சொல்லகூடாது தங்கவேல் , சுருளிராஜன் மற்றும் நாகேஷின் கலவை நிறைந்த அற்புத நகைச்சுவை நடிகன் அவன், மூன்று ஜாம்பவான்களை ஒரே ஆளாக நம் கண்முன் நிறுத்தியவன்
காலம் அவனுக்கு வழிவிட்டது, தமிழ் உலகம் அவனை கொண்டாடியது. மகா உச்சத்துக்கு எழும்பினான், எல்லா தரப்பு மக்களும் அவனை கொண்டாடினர்
எதையுமே உருப்பட விடாத திமுக அவன் வாழ்விலும் குறுக்கிட்டது அவன் சிக்கினான், விஜயகாந்த்துக்கு எதிராக அவனை கொம்பு சீவிவிட்டார்கள்
அவனும் மதுரையின் அப்பாவி வடிவேலுவாக அரசியல் சூது தெரியாமல் அப்படி ஆடினான்
ஒரு மாபெரும் கலைஞனின் வீழ்ச்சி தொடங்கிற்று, அரசியல் சகதியில் அவன் சிக்க காலம் அவனை கைவிட்டது
தமிழக இயல்பு அது அரசியலில் சிக்கிவிட்டபின் ஒருவன் மேலெழ முடியாது, ரஜினி அதில் கில்லாடி எல்லோரும் அவராகிவிட முடியாது
தனக்கு கொடுக்கபட்ட நஞ்சினை வடிவேலு உணரும் பொழுது அவர் கண்ணெதிரே விஜயகாந்திற்காக தவம் இருந்தது திமுக
அந்த நொடியில் வடிவேலு மனம் வெடித்து செத்திருக்கலாம், கதறி கதறி அழுதிருக்கலாம் ஆனால் அவரின் வாழ்வினை நொறுக்கிவிட்ட திமுக திருப்பி கொடுக்கவா முடியும்?
மாபெரும் இடத்தில் இருந்தவனை சூப்பிய மாங்கொட்டையாக வீசிவிட்டு அதன் போக்கில் சென்றுவிட்டது திமுக
அவனுக்கான இடத்தை சினிமாவிலோ இல்லை அரசியலிலோ கொடுக்க கூட அது விரும்பவில்லை அப்படி ஒரு நடிகன் இருப்பதாகவோ அவன் திமுகவுக்காக தன் வாழ்வை பலிகொடுத்தான் என்றோ அது கொஞ்சமும் உணரவில்லை
விட்ட இடத்தை பிடிக்க படாதபாடுபட்டுவிட்டு இப்பொழுது ஓரமாக நடக்கின்றார் வடிவேலு..
“செஞ்சோற்று கடனல்ல, செய்துவைத்த போதையில்
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
வடிவேலு
வஞ்சகம் திமுகடா…”