திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்

1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கருணாநிதி அந்த காரியத்தை செய்த நாள் இதுபாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாதுஇதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, இருவரின் சுயநலத்திலே அது உடைந்ததுபெரியாரே மன்றாடியும் ராமசந்திரன் இறங்கிவரவில்லைவிளைவு இன்றுவரை தமிழக சோகம் தொடர்கின்றதுஆனால் யானை தடம் தப்பியது போல தடுமாறிய கருணாநிதி பின்பு கட்சிகளை இணைக்க விரும்பினார், பல நடவடிக்கைகளை எடுத்தார், அப்பொழுது இணைப்பு பற்றி விரும்பாமல் ஓடியது ராமசந்திரனேஇதில் ஒரு விசித்திரம் உண்டுஆனால் கட்சி கணக்கு வேண்டும் என கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரனின் கட்சி கணக்கும் கட்சிக்காரர் கணக்கும் இன்றுவரை தெரியாதுஅப்படி ஒரு சவாலால் கட்சியே உடைந்தபின்னும் திமுகவின் சொத்து கணக்கும், கட்சிக்காரன் கட்சி கணக்கும் இன்றுவரையும் தெரியாதுஇதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது, அரசியலில் இதெல்லாம் சகஜம்தேசதுரோகி மணிரத்னம் தன் இருவர் படத்தில் அந்த காட்சியினை மிக அழகாக வைத்திருப்பார்கணக்கு கேட்டு கட்சியினை உடைத்துவிட்டு ஆட்சியினையும் பிடித்துவிட்டு தன் கட்சியில் ஊழல் பெருகியபின் கிளைமேக்ஸில் ஒரு திருமணத்தில் (தமிழிசை அக்கா திருமணம் போல) இருவரும் சந்திக்கும் பொழுது ஒருவித வெட்கமான, அசிங்கமான, இயலாமை, ஏமாற்று சிரிப்பு சிரிப்பார்கள்அந்த சிரிப்பினை மிக அழகாக கொண்டு வந்திருப்பார் தேசதுரோகி மணிரத்னம், அந்த சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு