காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

சீன அதிபரின் வருகையினை தொடர்ந்து காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? உண்டா இல்லையா என ஏகபட்ட விவாதங்கள்

காஞ்சியினை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆளும்பொழுது அத்தேசம் புத்த மத தேசமாக முதலில் இருந்தது, அந்நாளைய யதார்த்தபடி முதலில் பல்லவர்கள் புத்தர்களே கிருஷ்ணா நதி முதல் தமிழக புதுக்கோட்டை வரை அவர்களின் அரசு இருந்திருக்கின்றது

பல்லவர்கள் மணிபல்லவ தீவினை சேர்ந்ததால் பல்லவர் என்றும் பாரசீக பாஹல்லவர்களின் வாரிசு என்றும் பல தியரி உண்டு, எனினும் அவர்கள் பாரசீக வாரிசுகள் என்பதுதான் சரி என்கின்றார்கள்

காரணம் அலெக்ஸ்டாண்டருக்கு பின் இங்கு போக்குவரத்துகள் அதிகமாயின, அவனையொட்டி எழும்பிய ரோமர் கப்பல் படையில் வல்லராயிருந்தனர்

ரோமரின் கப்பல்படையின் நுட்பம் மத்திய ஆசியாவில் பரப ஆரம்பித்தபொழுது பல இனங்கள் கப்பல் கப்பலாக கிளம்பி கிடைத்த இடத்தில் ஆட்சி அமைத்தனர்

(சிங்களனே இலங்கையில் அப்படித்தான் குடியேறினான்)

ப‌ல்லவர் அப்படி வந்தவர்களாக இருக்கலாம் என்கின்றார்கள்,

இங்கு முதல் கப்பல்படை அவர்கள் காலத்தில்தான் அறியபடுகின்றது, ராஜராஜ சோழன் பல்லவருக்கு நெடுங்காலத்துக்கு பின் வந்து கடாரத்துக்கு கப்பல் படை அனுப்பியவன்

பல்லவர் புத்தமதம் என்பதாலும் அன்றே அவர்கள் கடல்வழி பாதை அறிந்தவர் என்பதாலும் சீனாவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கின்றது

முதலில் புத்தமதமாக இருந்தபொழுதுதான் புத்த துறவிகளின் போக்குவரத்து இருந்திருக்கின்றது, இந்த போதிதர்மர் எல்லாம் அப்பொழுது சென்றவரே

பின்பு ஒரு கட்டத்தில் அதாவது ஆதி சங்கரர் காலத்தில் இப்பூமி புத்தமதத்தை அழித்தொழித்து தாய்மதம் திரும்பிய காலத்தில் பல்லவரும் தாய்மதம் திரும்பினர்

காஞ்சி மடத்தை ஆதிசங்கரர் அமைக்கவில்லை, ஆனால் சிருங்கேரி மடத்தின் தொடர்ச்சியாக அது காஞ்சியில் அமைக்கபட்டது, அமைத்து கொடுத்ததில் பல்லவர் பங்கும் உண்டு

இன்றைய கிழக்காசிய நாடுகளை சோழர் பாண்டியருக்கு முன் பல்லவர் இனமே ஆண்டது, காஞ்சியில் வாரிசு சண்டை உச்சத்தில் இருந்தபொழுது காம்பொஜம் நாட்டின் (கம்பொடியா) மன்னராக நந்திவர்மன் எனும் மன்னன் முடிசூட்டபட்டான் அவன் கட்டியதுதான் அங்கோர்வாட் எனப்படும் பிரமாண்ட இந்து ஆலயம்

கலையின் உச்சத்தில் இருந்த பல்லவ மன்னர்கள் தீவிர இந்துக்களாய் மதம் வளர்த்தனர், மாமல்லன் எனும் மகேந்திரவர்வம் ராஜராஜ சோழனை விட பெரும் அரசனாய் இருந்தான்

அவன் இந்து புராண சம்பவங்களை சிலைகளாய் வடித்துவைத்ததுதான் இன்றைய மாமல்லபுர சிற்பம், மாமல்லபுரத்தை இன்றைய ஆந்திர தலைநகர் அமராவதி போல் அவன் நிர்மானித்திருக்கின்றான்

இன்று கடற்கரையில் காணும் கோவிலை போல இன்னும் 6 கோவில்கள் உண்டெனவும் அவை எல்லாம் கடலில் மூழ்கிற்று என்பதும் ஒரு ஆய்வு

பல்லவர்களே இங்கு கலையினை வளர்த்தவர்கள், பல்லவர்கள் காலமே இந்து ஆலயங்கள் காஞ்சியில் எழும்பி அந்நகரம் கோவில்களின் நகரம் என பெயர் பெறவும் காரணம்

சீனாவுக்கும் அவர்களுக்குமான தொடர்பில் மதம் வியாபாரம் என எல்லா விஷயமும் இருந்தது, அந்த சீன தொடர்பில் உருவானதுதான் பட்டு நெசவு, இன்றும் காஞ்சிபுரம் பட்டுக்கு மதிப்பே தனி

சீன டிராகனின் வடிவம் பல்லவ சிற்பம் மற்றும் ஆலயங்களில் உண்டு

இப்படியாக தமிழக வரலாற்றில் புத்தமதத்திலிருந்து தாய்மதம் திரும்பி, கப்பல் படை கொண்டு கிழக்கெல்லாம் வென்று பெரும் தமிழ் வல்லரசாக அது விளங்கிற்று

எல்லா அரசும் ஒரு காலத்தில் சரியும் என்பது போல அதுவும் சரிந்தது, அதன் பின்பே சோழ வம்சம் எழும்பிற்று

ஒரு கட்டத்தில் பல்லவ பகுதியும் சோழரிடம் விழுந்தது, காஞ்சி தன் முக்கியத்துவத்தை இழந்தது தஞ்சை எழும்பியது, காஞ்சிக்கு போட்டியாக மாபெரும் ஆலயத்தை அமைக்க எண்ணிய ராஜராஜன் மாபெரும் ஆலயத்தை கட்டினான்

இன்று பல்லவ காஞ்சியின் அடையாளமாக கோவில்களும், மகாபலிபுரமும் அவர்களின் சீன உறவின் அடையாளமாக பட்டுமே எஞ்சியிருக்கின்றது

பல்லவர் அரசை அப்படியே எடுத்த சோழர்கள், பல்லவ பகுதி எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் அதிகாரம் செலுத்தினர், அப்படித்தான் கடாரம் வியட்நாம் இன்றைய என பின்பு கால்பதித்தனர்

எல்லா புகழும் பல்லவரையே சாரும்

பாண்டியருக்கு நெடுஞ்செழியன், சேரனுக்கு செங்கூட்டுவன், சோழருக்கு ராஜராஜன் போல பல்லவருக்கு மகேந்திரவர்மன் இருந்தான் அவன் மல்யுத்த வீரன், பெரும் வீரனானதால் மாமல்லன் என அழைக்கபட்டான்,அவன் நினைவாக உருவானதுதான் மாமல்லபுரம்

அந்த புராதான நகருக்குத்தான், கிழக்காசியா முழுக்க ஆண்ட நாட்டின் சிறப்பு நகராக இருந்த அந்த மாமல்லபுரத்துக்குத்தான் சீன அதிபர் வருகின்றார்

பல்லவமும் சீனமும் புத்தபூமியாய் இருந்தபொழுது உருவான தொடர்பு அது, அதற்கு முன்பு இரு நாடுகளும் இந்து பூமியாய் இருந்தபொழுது இமயமலை பக்கம் தரைவழி தொடர்பே இருந்தது.

இங்கு ஆதிசங்கரர் வந்து இந்துமதத்தை தழைக்க செய்தார் தர்மம் திரும்பியது, சீனத்தில் எந்த சங்கரரும் உருவாகவில்லை அது புத்தமதத்தின் வடிவமாக நீடிக்கின்றது எனினும் அவர்கள் கலாச்சாரமும் வழிபாடும் இந்து முறையே

இங்கு சோழர்கள், பாண்டியர்கள், கப்பல் படை என வாய்கிழிய பேசுபவர்கள் அவர்களின் முன்னோடியாய் கடல் ஆண்ட பல்லவர் பற்றி பேசமாட்டார்கள் ஏன்?

பேசினால் புத்தமதத்தில் இருந்து அவர்கள் இந்துமதத்திற்கு தழுவிய வரலாறும், ஆதிசங்கர் ஏற்றிவைத்த பேரேழுச்சி எல்லாம் பேசவேண்டி வரும்

இதனால் மாமல்லபுரம் , பாண்டவர் சிலை, பகீரதன் தவம் என்பதோடு நிறுத்துவார்கள். புத்த போதிதர்மனின் பூமியில் எப்படி இந்து அடையாளம் வந்தது என யோசிக்க சொல்லமாட்டார்கள்

நீங்கள் யோசியுங்கள் உங்களுக்கு நிறைய புரியும்..