சீனா தமிழை ஊக்குவிக்கின்றது

சீனாவில் தமிழ் உண்டு, தமிழரின் பெருமை பாரீர் என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது

ஆம் அது உண்மைதான், சீன அரசின் சார்பில் வானொலியில் தமிழில் செய்தி வாசிப்பார்கள். அது அதிகம் சென்றடையாது எனினும் சீனா தமிழை ஊக்குவிக்கின்றது. சீனர்கள் தமிழ்படிக்கின்றார்கள், இலக்கியம் படிக்கின்றார்கள் இன்னும் பல விஷயம் தமிழில் உண்டு

தமிழை வளர்க்க திமுக இருக்கும்பொழுது சீனா ஏன் என உங்களுக்கு சந்தேகம் எழலாம்

சீனா தமிழை மட்டும் வளர்க்கவில்லை ஆசிய மொழிகள் பலவற்றை இதை போல வளர்க்கின்றது

ஏன்?

அதுதான் அரசியல் கணக்கு, நிச்சயம் ஆசியாவினை ஆளபோகின்றோம் என நம்புகின்றது சீனா நாளை இன்னொரு நாட்டில் காலடி எடுத்துவைக்கும் பொழுது அந்நாட்டு மொழி தெரிதல் அவசியம் என கருதுகின்றது

இப்போதைக்கு வியாபார கணக்கு என சொல்லிகொள்கின்றார்கள்

பாருங்கள் இலங்கையில் ஏகபட்ட முதலீடுகளை செய்கின்றது சைனா, அப்படியே ஈழம் வந்து “வங் டங் டிங்” என பேசுவதை விடை “எப்படி இருக்கியள் சுகமே?, நாங்கள் எங்கட நாட்டிலிருந்து வியாபாரத்துக்கு வந்திருக்கோம்” என பேசினால் எப்படி இருக்கும்?

அப்படியே கடல் தாண்டி வந்து தமிழக அமைச்சர்களிடம் நேரடியாக “எவ்வளவு எதிர்பார்க்கின்றீர்கள்? சீனாவின் யுவானா? இல்லை அமெரிக்க டாலரா?” என கேட்டால் எப்படி இருக்கும்?

வியாபாரமும் அரசியலும் நெருக்கமும் அதிகமாகும் அல்லவா?

அப்படியே நாளை ஒரு யுத்தம் வந்தாலும் இங்கு சீனபடை கால்பதித்தாலும் தமிழரை தமிழில் தொடர்பு கொள்ளுதல் எளிதல்லவா?

இப்படி வியாபாரம், அரசியல் உள்ளிட்ட ஏக காரணங்களுக்காக எல்லா மொழிகளையும் வளர்க்கின்றது சைனா, தமிழும் அதில் உண்டு

அவர்களின் கணக்கு துல்லியமானது, முழுக்க சுயநலம் அன்றி வேறல்ல‌

இங்கே தமிழன் இந்தி படிக்க கூடாது என்பதும் முழு சுயநலம் அன்றி வேறல்ல, இது வேறுமாதிரியான அரசியல் கணக்கு

அதாவது தமிழ் உட்பட பல மொழிகளை கற்றால் உலகாளலாம் என கருதுகின்றது சைனா, இங்கு இந்தி கற்றால் தமிழன் இந்தியனாகிவிடுவான் என அஞ்சுகின்றது திமுக