இந்நாட்டில் கிறிஸ்தவருக்கு என்ன சிக்கல்?
இந்நாட்டில் கிறிஸ்தவருக்கு என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை..
அவர்கள் ஆலயங்களுக்கும் வழிபாட்டுக்கும் தடை இல்லை, கல்வி நிலையங்களுக்கு சிக்கல் இல்லை. கிறிஸ்தவர் தொழில் நடத்தவோ ஏன் விஜய் போன்றவர் சினிமாவில் நடிக்கவும் சிக்கல் இல்லை
கிறிஸ்தவர் என்பதற்காக யாரும் புறக்கணிக்கபடவில்லை, அவர்களுக்கான முழு பாதுகாப்பை தேசம் உறுதி செய்திருக்கின்றது
கிறிஸ்தவன் என்பதற்காய் நீதி கிடைக்கவில்லை, தொழில் கிடைக்கவில்லை, கல்வி இல்லை வேலை இல்லை என எந்த கிறிஸ்தவன் இங்கு சொல்லமுடியும்?
மற்றவர்களை விட உங்களுக்கு எல்லாம் நிரம்ப கிடைகின்றன, மனசாட்சியோடு இருங்கள்.
இந்தியர் என கிறிஸ்தவர் தங்களை நினைத்தால் நிச்சயம் மகிழ்வார்கள் ஆனால் அவர்கள் மனநிலை இந்தியர் என்பதை தாண்டி கிறிஸ்தவர் கிறிஸ்துவத்தை பரப்ப அவதரித்திருப்பவர்கள் என நினைக்கும் பொழுதுதான் சிக்கல் வெடிக்கின்றது
தாங்கள் கல்விகொடுப்பதும் சேவை செய்வதும் மதம் மாற்றுவதற்காக என்பதும் அதில் தடை வரும்பொழுது பொறுக்க முடியாது என்பதுமே அவர்களின் புலம்பலுக்கு காரணம்
சீனா இன்னும் பல நாடுகள் மதமாற்றத்துக்கு தடை விதித்திருப்பது போல இந்தியாவிலும் சில குரல்கள் இருக்கலாம் அது எக்காலமும் உள்ள குரல் , மோடி அரசில் மட்டும் அல்ல
இந்தியராக நினைத்தால் கிறிஸ்தவருக்கு இது அற்புதமான நாடு மாறாக தன் மதத்தை பெருக்கும் ஆய்வுகூடமாக நினைத்தால் அதை நினைத்து புலம்பினால் யாரும் எதுவும் செய்யமுடியாது
சிக்கல் உங்களிடமே உள்ளது மற்றவர்களிடம் அல்ல
அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என்றார் இயேசு, யூத இனத்தின் தனிபெரும் அடையாளமான இயேசு ஒரு இடத்தில் கூட தான் வரிகட்டிய ரோமனுக்கு எதிராய் ஒருவார்த்தை பேசவில்லை
மதம் வேறு அரசு வேறு என்பதில் சரியாக இருந்தார்
நீங்கள் கிறிஸ்தவராய் இருந்தால் அப்படி இருப்பீர்கள் ஆனால் உங்களுக்குள் கிறிஸ்துவா இருக்கின்றார்? அல்ல முழு சாத்தான் குடியிருகின்றது அது இப்படித்தான் வாழும் நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல் நன்றி இல்லாமல் பேச சொல்லும்