உய்குர் இஸ்லாமிய மக்களுக்காக இஸ்லாமிய நாடுகள் பேசவில்லை
உய்குர் இஸ்லாமிய மக்களுக்காக இஸ்லாமிய நாடுகள் பேசவில்லை ஆனால் அமெரிக்கா விவகாரத்தை கையில் எடுக்கின்றது
இது உய்குர் மக்கள் மேலான பாசமா என்றால் சத்தியமாக இல்லை, இஸ்லாமிய அபிமானமா என்றால் அமெரிக்காவின் இஸ்லாமிய அபிமானம் பாலஸ்தீன், ஈராக், ஆப்கனிலே தெரிந்தது
சீனாவினை முடக்கி தீரும் வெறியில் இருக்கும் அமெரிக்கா உய்குரில் சீனா அடாவடி செய்வதால் பொருளாதார தடை விதிக்கபோகின்றோம் என சொல்லி சீன அதிகாரிகளுக்கு விசா மறுத்திருக்கின்றது
சீனாவினை தனிமைபடுத்த முழங்காலில் நிறுத்த போகின்றார்களாம்
சீனாவினை வம்புக்கு இழுக்க உய்குர் விவகாரத்தை கையில் எடுக்கின்றது அமெரிக்கா, சரி பாலஸ்தீனத்தில் அடாவடி செய்யும் இஸ்ரேல் மேல் என்ன நடவடிக்கை? என கேட்டால் அமெரிக்காவிடம் இருந்து ஒரு பதில் வரும்
அது என்ன தெரியுமா?
“நீ மனுகுலத்துக்கு எதிரானவன்…”